Skip to main content

சசிகலா மீண்டும் அதிமுகவிற்குள் வந்துவிடக்கூடாது என்று ஒவ்வொரு அடியையும் பார்த்துப் பார்த்து எடித்து வைத்து வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!

Feb 15, 2021 238 views Posted By : YarlSri TV
Image

சசிகலா மீண்டும் அதிமுகவிற்குள் வந்துவிடக்கூடாது என்று ஒவ்வொரு அடியையும் பார்த்துப் பார்த்து எடித்து வைத்து வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி! 

சசிகலா மீண்டும் அதிமுகவிற்குள் வந்துவிடக்கூடாது என்று ஒவ்வொரு அடியையும் பார்த்துப் பார்த்து எடித்து வைத்து வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால், ஓ.பன்னீர்செல்வமோ, எப்படியாவது சசிகலாவை அதிமுகவிற்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என்றே துடிப்பதாக அக்கட்சியினர் மத்தியில் பேச்சு இருக்கிறது.



ஈபிஎஸ் -ஓபிஎஸ் இருவரும் ஆளுக்கொரு பாதையில் இப்படி போய்க் கொண்டிருந்ததால் அதிமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலவியது.



ஓபிஎஸ்சை மனதில் வைத்தே, கட்சியின் நிர்வாகிகள் கட்சிக்கு துரோகம்செய்ய நினைக்கிறார்கள் என்று சி.வி.சண்முகம் உள்ளிட்ட சில அமைச்சர்கள் பேச ஆரம்பித்தனர்.



டெல்லியில் பிரதமருடனான சந்திப்பிற்கு பின்னர், ’’சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது என்பது நூறு சதவிகிதம் கிடையாது’’ என்று புதுத்தெம்போடு பேட்டை அளித்தார்.



டெல்லி விசிட்டுக்கு பின்னர் சசிகலாவை தீவிரமாக எதிர்க்க ஆரம்பித்தார் ஈபிஎஸ். ஆனால், அதன்பின்னரும் கூட சசிகலா அதிமுக வுக்கு வருவது குறித்து எதுவும் பேசவில்லை.



முதல்வர் சூறாவளி பிரச்சாரம் செய்து வந்த நிலையிலும் வெளியே அதிகம் தலைகாட்டாமல் முடங்கியே இருந்தார் ஓபிஎஸ்.



சசிகலா இந்த சூழலில் விடுதலையாகி வந்து, தீவிர அரசியலில் ஈடுபடுவதாக அறிவித்ததும், அதிமுக மீட்டெடுப்பது குறித்தும், சசிகலாவை தேர்தலில் போட்டியிட வைப்பது குறித்தும் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுத்துவருவதாக டிடிவி தினகரன் அறிவித்ததும், ஈபிஎஸ்க்கு நெருக்கடியை அதிகப்படுத்தியது. இதனால், அவர் பிரச்சாரத்தில் சசிகலாவை கடுமையாக விமர்சித்தார்.



முதலைமைச்சர் பதவி போனால் என்ன? அதற்காக இப்படியா அடித்துக்கொள்வது? தெருவில் நின்று காட்டுமிருகம் போல கத்துவது? என்று கமெண்ட் அடித்தார் டிடிவி தினகரன்.



சசிகலாவை அதிமுகவுடன் சேர்த்துக் கொள்ளாவிட்டால் அதிமுக 50 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பினை இழக்க நேரிடும் என்று துக்ளக் குருமூர்த்தி சொன்னதை வைத்து, அதிமுகவுடன் சசிகலாவை இணைக்க பாஜக பாடுபடுகிறது என்ற பேச்சு எழுந்தது. ஆனால், பாஜக நிர்வாகிகள் இதை மறுத்து வந்தனர்.



இந்த பரபரப்பான சூழலில் பல்வேறு திட்டங்களை தொடங்கிவைக்க அரசு முறை பயணமாக நேற்று சென்னை வந்தார் பிரதமர் மோடி நேரு உள் விளையாட்டரங்கில் நடந்த விழாவில் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் முதல்வர் – துணை முதல்வர் இருவரின் கைகளை பிடித்து உயர்த்தி காட்டினார் மோடி. ஆனால், விழாவினை முடித்துக்கொண்டு அங்கிருக்கும் க்ரீன் அறையின் ஈபிஎஸ் -ஓபிஎஸ் உடன் ஆலோசனை நடத்த இருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால், ஈபிஎஸ் உடன் மட்டுமே 10 நிமிடம் ஆலோசனை நடத்தினார் மோடி.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

6 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

6 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

6 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

6 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

6 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

6 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை