Skip to main content

ரஷ்ய ஆர்ப்பாட்டங்களில் 5,000 பேர் வரை கைது

Feb 02, 2021 307 views Posted By : YarlSri TV
Image

ரஷ்ய ஆர்ப்பாட்டங்களில் 5,000 பேர் வரை கைது 

ரஷ்யாவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நவல்னியை விடுதலை செய்யக்கோரி அரசின் கட்டுப்பாடுகளையும் மீறி ஆயிரக்கணக்கானவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.



மைனஸ் 40 டிகிரி அளவுக்கு மிகவும் குளிர் நிறைந்த இடங்களில் கூட ரஷ்ய அரசுக்கு எதிராக நவல்னியின் ஆதரவாளர்கள் போராடி வருகின்றனர்.



இந்த ஆர்ப்பாட்டங்களில் 5,000க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இரண்டாவது வார இறுதியாகவே இந்த ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.



ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் முழக்கம் செய்தனர். தலைநகர் மொஸ்கோவில் பல ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.



நவல்னி, நஞ்சூட்டப்பட்டு, நினைவற்ற நிலையில், ஜெர்மனியில் ஐந்து மாதங்களாகச் சிகிச்சை பெற்றுவந்தார்.



அதன் பின் ரஷ்யாவுக்குத் திரும்பிய அவர் மொஸ்கோ விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். அடுத்த சில தினங்களில் வழக்கு விசாரணையை எதிர்நோக்கும் நவல்னிக்கு நீண்ட சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

24 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை