Skip to main content

புதிய பிரதமராகிறார் 71 வயது யோஷிஹைட் சுகா!

Sep 14, 2020 220 views Posted By : YarlSri TV
Image

புதிய பிரதமராகிறார் 71 வயது யோஷிஹைட் சுகா! 

ஜப்பான் நாட்டில் நீண்டகாலம் பிரதமர் பதவியில் வகித்தவர் எனும் பெருமைக்கு உரியர் ஷின்சோ அபே. லிபரல் ஜனநாயக் கட்சியைச் சேர்ந்த ஷின்சே அபே, சென்ற மாத இறுதியில் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இவருக்கு வயது 65.



ஷின்சே அபேவின் ராஜினாமாவுக்கு கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக அவருக்கு இருந்த உடல்நலக் குறைபாடு என்று ஜப்பான் நாட்டுச் செய்திகள் தெரிவித்தன. ஷின்சே அபேவும் அப்போது மருத்துவமனைக்குச் சென்று திரும்பும் செய்திகள் வெளியாகின.



ஆனால், இன்னொரு தரப்பினர் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் முழு வெற்றி காண முடியாததால் கட்சியின் நெருக்கடியாலும் தனது பதவியை ராஜினாமா செய்தார் என்றும் சொல்லப்பட்டது.



இந்நிலையில் அக்கட்சிக்கு தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் அந்த நாட்டின் தலைமை அமைச்சக செயலாளராக இருக்கும் யோஷிஹைட் சுகாவும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் முன்னாள் வெளியுறவு அமைச்சர் உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.



அவர்களில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் 71 வயது யோஷிஹைட் சுகா வெற்றி பெற்று லிபரல் ஜனநாயக் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மொத்தம் உள்ள 534 வாக்குகளில் யோஷிஹைட் சுகாவுக்கு 377 வாக்குகள் கிடைத்தன. இதன்மூலம் அவர் ஜப்பான் நாட்டின் பிரதமராகவும் தெர்ந்தெடுக்கப்படுவார்.



யோஷிஹைட் சுகா முன்னாள் பிரதமர் ஷின்சே அபேவின் நெருங்கிய நண்பர். அவருக்கு பக்கபலமாக பல்வேறு தருணங்களில் நடந்துகொண்டிருக்கிறார் யோஷிஹைட் சுகா.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை