Skip to main content

10 லட்சம் கோடி முதலீடு - ரயில் சேவை உட்பட உட்கட்டமைப்புகளை மேம்படுத்த!

Sep 07, 2020 234 views Posted By : YarlSri TV
Image

10 லட்சம் கோடி முதலீடு - ரயில் சேவை உட்பட உட்கட்டமைப்புகளை மேம்படுத்த! 

இந்தியாவுடன் நிலப்பரப்பைப் பகிர்ந்துகொள்ளும் திபெத்தின் தென்கிழக்குப் பகுதியான நிங்சியை ரயில் மூலம் இணைக்க சீனா திட்டமிட்டுள்ளது. இதற்காக சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் இருந்து நிங்சிக்கு ரயில் பாதை அமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.



இத்திட்டத்தின் சவாலான பகுதியாக கருதப்படும் செங்டு முதல் லாசா வரை பாதை அமைக்கும் பணி அடுத்த வாரம் தொடங்க உள்ளது. இதேபோன்று மற்றொரு அண்டை நாடான நேபாளத்தில் இருந்து திபெத்தின் 2-வது பெரிய நகராக உள்ள சிகாட்சே-க்கு (Shigatse) ரயில் பாதை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்த சீனா திட்டமிட்டுள்ளது.



இந்தியாவுடன் எல்லையில் மோதல் போக்கைக் கடைப்பிடித்து வரும் சீனா, இந்தியாவை ஒட்டியுள்ள பகுதியில் பாதுகாப்பைப் பலப்படுத்தும் விதமாக பல லட்சம் கோடி செலவில் இத்திட்டங்களைச் செயல்படுத்த முனைப்புக் காட்டி வருகிறது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

5 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை