Skip to main content

கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்து அமெரிக்காவில் வெற்றிகரமாக பரிசோதனை....!

May 20, 2020 314 views Posted By : YarlSri TV
Image

கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்து அமெரிக்காவில் வெற்றிகரமாக பரிசோதனை....! 

அமெரிக்காவைச் சேர்ந்த, மொடேர்னா இன்க், என்ற பயோடெக் நிறுவனம், கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்தை, மனிதர்களிடம் வெற்றிகரமாக பரிசோதித்து பார்த்து உள்ளதாக அறிவித்துள்ளது.



மனிதர்களிடம் இந்த மாதிரியான தடுப்பூசி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது இது தான் முதல் முறை என்பதால் இந்த ஆய்வு முடிவு உலகளாவிய அளவில் மிகுந்த கவனத்தை ஈர்த்துள்ளது.



நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உலகம் முழுக்க கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.



இதில் அமெரிக்காவைச் சேர்ந்த மொடேர்னா பயோடெக் நிறுவனமும் அடங்கும். சில மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள், குரங்குகளுக்கு பரிசோதனையை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளன. எலிகளுக்கும் பரிசோதனை செய்துள்ளனர். ஆனால், மனிதர்களுக்கான பரிசோதனை முடிவுகள் இன்னும் வெளிவராமல் இருந்தது. அமெரிக்காவை சேர்ந்த இந்த ஆய்வகம் மனிதர்களுக்கான தடுப்பூசி பரிசோதனையை கடந்த மார்ச் மாதம் தொடங்கியது.



45 வகையான பாதுகாப்பு வழிமுறைகளுடன் இந்த தடுப்பூசி உருவாக்கப்பட்டு அதில் தன்னார்வலர்கள் 8 பேர் தாங்களாக முன்வந்து தடுப்பூசிகளை உடலில் ஏற்றுக்கொண்டனர்.



இந்த நிலையில்தான், தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் வைரஸ் பாதிப்பில் சிக்காமல் தப்பித்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் இவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 100 மைக்ரோ கிராம் என்ற அளவுக்கு தடுப்பூசி கொடுத்தது. கூடுதலாக 25 மைக்ரோ கிராம் அளவுக்கு ஆன்டிபாடி எனப்படும் நோய் எதிர்ப்பு மருந்தும் செலுத்தப்பட்டது.



தற்போது, இவர்களது இரத்தத்தைப் பரிசோதித்து பார்த்தபோது, கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து சிகிச்சைக்கு பிறகு மீண்ட மக்களுடைய இரத்தத்தில் காணப்படும் கூடிய எதிர்ப்பு சக்தி, இவர்களுக்கும் இருப்பதை அறிந்து கொள்ள முடிந்தது.



இது முதல் கட்டமான பரிசோதனை முடிவு என்பதால் மிகுந்த எச்சரிக்கையுடன் மருந்துகள் செலுத்தப்பட்டுள்ளன. அதாவது, இந்த மருந்துகளால் அதை உடலில் ஏற்றுக்கொண்டவர்களுக்கு, பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டது. இந்த மருந்து அவர்களுக்கு எந்த பக்க விளைவையும் ஏற்படுத்தவில்லை என்பது உறுதி செய்யப்பட்டு விட்டது. எனவே மருந்தின் ஆற்றலை இன்னும் அதிகப்படுத்துவதற்கு நிறுவனம் முயற்சி செய்கிறது.



இதுகுறித்து மொடேர்னா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,



இரண்டாவது கட்ட ஆய்வின்போது, மருந்து அளவை அதிகரிக்க உள்ளோம். அதாவது 250 மைக்ரோ கிராம் அளவுக்கு தடுப்பு மருந்தும், 50 மைக்ரோ கிராம் அளவுக்கு நோய் எதிர்ப்பு மருந்தும் கொடுக்க உள்ளோம். இது பக்க விளைவு ஏற்படுகிறதா என்பதை அடுத்த கட்டமாக பார்க்க உள்ளோம் என்று தெரிவித்துள்ளது.



இது கொரோனா வைரசுக்கு எதிரான யுத்தத்தில், முக்கியமான, முதல் வெற்றி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

5 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

5 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

5 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

5 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

5 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

5 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை