Skip to main content

ஜியோ அமைப்பினர் போராட்டம் கோவையில் போக்குவரத்து பாதிப்பு!

Jan 30, 2024 48 views Posted By : YarlSri TV
Image

ஜியோ அமைப்பினர் போராட்டம் கோவையில் போக்குவரத்து பாதிப்பு! 

சாலை மறியலில் ஈடுப்பட்ட 500"க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்றனர்.



காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், பிடித்தம் செய்யப்பட்ட ஊதியத்தை தர வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர்  தமிழகம் முழுவதும் ஒரு நாள் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக முன்பு  மறியல் போராட்டம் நடைபெற்றது.



இந்த போராட்டத்தில் 500"க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராகவும் அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர். பின்னர் சாலை மறியலில் ஈடுப்பட்ட 500"க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்றனர்.



இதனிடையே செய்தியாளர்களை சந்தித்து பேசிய போராட்ட குழுவினர் CPS திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், ஊதிய முரண்பாட்டை களைதல் வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், காலம் முறை ஊதியம் வழங்க வேண்டும். தமிழக அரசு கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வருகின்ற பிப்ரவரி 15-ம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம்



இந்த போராட்டத்திற்கு தமிழக அரசு செவி சாய்க்கவில்லை என்றால் வருகின்ற பிப்ரவரி 26-ம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாக போராட்ட குழுவினர் தெரிவித்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலம் முன்பு 500க்கும் மேற்பட்டோர் திரண்டு மறியலில் ஈடுப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

4 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

4 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

4 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

4 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

4 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

4 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை