Skip to main content

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கை!

Jan 01, 2024 30 views Posted By : YarlSri TV
Image

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கை! 

ஜப்பானில் இன்று (01) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.



இந்த நிலநடுக்கம் 7.4 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



ஜப்பானின் நானாவோ, இஷிகாவா பகுதியிலிருந்து 54 கிலோ மீற்றர் தொலைவில் குறித்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.



சுனாமி எச்சரிக்கை





இதனால் ஜப்பானின் மேற்கு கடற்கரையின் பரந்த பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.





ஜப்பானின் இஷிகாவா, நைகட்டா, டொயாமா மற்றும் யமகட்டா மாகாணங்களின் கரையோரப் பகுதிகளை விட்டு விரைவாக மக்களை வெளியேறுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.



இஷிகாவாவில் உள்ள நோட்டோ தீபகற்பத்திற்கு 5 மீற்றர் வரை அலைகள் கணிக்கப்பட்டுள்ளதாக ஜப்பானின் NHK தெரிவித்துள்ளது.



புத்தாண்டு தினமான இன்று ஏற்பட்ட நிலநடுக்கம், டோக்கியோ மற்றும் கான்டோ பகுதி முழுவதும் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

5 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

5 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

5 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

5 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

5 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

5 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை