Skip to main content

கொழும்பில் துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயம் !

Feb 14, 2024 42 views Posted By : YarlSri TV
Image

கொழும்பில் துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயம் ! 

கொழும்பு -  முகத்துவாரம் வீதி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.



முகத்துவாரம் வீதி பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் முகாமையாளராக பணியாற்றி வரும் குறித்த நபர், நேற்று இரவு அந்த உணவகத்தின் நுழைவாயிலுக்கு அருகில் இருந்த போது காரில் வந்த இனந்தெரியாதோரால் இந்த துப்பாக்கி பிரயோகம்  மேற்கொள்ளப்பட்டுள்ளது. 



குறித்த நபர் கொழும்பு -14 மஹவத்தை பகுதியை சேர்ந்த 51 வயதானவர் அவர்  கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



இந்த துப்பாக்கிச் சூட்டுக்காக கைத்துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிஸார் சம்பவத்தின் பின்னர் சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.



துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை .


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை