Skip to main content

தேர்தல் ஆணையத்தில் கட்சியை பதிவு செய்த விஜய்!

Feb 02, 2024 30 views Posted By : YarlSri TV
Image

தேர்தல் ஆணையத்தில் கட்சியை பதிவு செய்த விஜய்! 

டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்தில் நடிகர் விஜய் அவரது கட்சியை பதிவு செய்ததையடுத்து, கோவையில் விஜய் மக்கள் இயக்கத்தினர் கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டனர்.



டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்தில் நடிகர் விஜய் அவரது கட்சியை பதிவு செய்ததையடுத்து,  கோவையில் விஜய் மக்கள் இயக்கத்தினர் கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டனர்.



தனது கட்சிக்கு தமிழக வெற்றிக் கழகம் (TVK) எனப் பெயரிட்டுள்ள நடிகர் விஜய், வருகின்ற நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளார்.



நடிகர் விஜய் அரசியல் இயக்கத்தை தொடங்கியுள்ளார். இந்த அரசியல் இயக்கம் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப் போகிறது.



இது குறித்து நடிகர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தற்போதைய அரசியல் சூழல் பற்றி நீங்கள் அனைவரும் அறிந்ததே. நிர்வாக சீர்கேடுகள், ஊழல் மலிந்த அரசியல் கலாசாரம் ஒருபுறம் என்றால் பிளவுவாத அரசியல் கலாசாரம் மறுபுறம் என இருபுறமும் நமது முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டைகள் நிறைந்துள்ளன.



ஒரு தன்னலமற்ற வெளிப்படையான சாதி மத பேதமற்ற தொலைநோக்கு சிந்தனை உடைய லஞ்ச ஊழலற்ற திறமையான நிர்வாகத்துக்கு வழிவகுக்கக் கூடிய அரசியல் மாற்றத்துக்கு குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஏங்கிக் கொண்டிருக்கின்றனர்.



மிக முக்கியமாக இத்தகைய அரசியல் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்துக்கு உட்பட்டு இந்த மண்ணுக்கேற்ற பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் உடையதாக இருக்க வேண்டும்.



அத்தகைய அடிப்படை அரசியல் மாற்றத்தை மக்கள் சக்தியால்தான் ஏற்படுத்த முடியும்” எனத் தெரிவித்துள்ளார். மேலும், நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு இன்னமும் இரு மாதங்கள் மட்டுமே இருப்பதால் இந்தத் தேர்தலில் நடிகர் விஜய்யின், தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடப்போவதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.



நடிகர் விஜய் தற்போது சில படங்களில் நடித்துவருகிறார். இந்தப் படங்களில் நடித்து கொடுத்துவிட்டு அவர் முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

4 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

4 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

4 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

4 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

4 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

4 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை