Skip to main content

பா.ஜ.க-வுக்கு களம் அமைக்கிறது காங்கிரஸ்!

Feb 01, 2024 58 views Posted By : YarlSri TV
Image

பா.ஜ.க-வுக்கு களம் அமைக்கிறது காங்கிரஸ்! 

மால்டா சுற்றுப்பயணத்தில், பாரத் ஜோடோ நியாய யாத்திரை புதன்கிழமை வங்காளத்தில் மீண்டும் நுழைந்தது. காங்கிரசுக்கு 2 லோக்சபா தொகுதிகள் வழங்குவதை மீண்டும் வலியுறுத்திய டி.எம்.சி தலைமை, சி.பி.ஐ (எம்) உடன் இணைந்து பணியாற்ற முடியாது என்று உறுதியாகக் கூறினார்



ராகுல் காந்தி பாரத் ஜோடோ நியாய யாத்திரை மேற்கு வங்கத்தில் மீண்டும் நுழைந்தபோதும், இந்திய அணி மீதான தனது தாக்குதல்களில் எந்தக் குறையும் காட்டாமல், முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி புதன்கிழமை காங்கிரஸைக் கடுமையாக விமர்சித்தார். லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக மாநிலத்தில் பா.ஜ.க-வுக்கு பாதை அமைக்க சி.பி.ஐ (எம்) இணைந்து செயல்படுவதாக குற்றம் சாட்டி, காவி அணிக்கு எதிராக டி.எம்.சி மட்டுமே போராடுகிறது என்றும் கூறினார்.



மம்தா பானர்ஜி உரையாற்றிக்கொண்டிருந்த மால்டா மாவட்டத்தில், ராகுலின் யாத்திரையும் புதன்கிழமை சென்று கொண்டிருந்தது. யாத்திரை தாக்குதலுக்கு உள்ளாகியதாக கூறப்படுகிறது. ராகுலின் கார் மீது சமூக விரோதிகள் கற்களை வீசி, காரின் பின்பக்க கண்ணாடியை உடைத்ததாக காங்கிரஸ் கூறியது.



மால்டா நகரம் வழியாக பாதயாத்திரையை மேற்கொண்ட மம்தா பானர்ஜி, நிர்வாகக் கூட்டத்தில் பேசுவதற்கு முன், சாலையோரம் நின்றிருந்த மக்களை வாழ்த்தி ஒரு கிலோமீட்டருக்கும் மேலாக நடந்து சென்றார்.



“சி.பி.ஐ (எம்) ஆட்சியில்தான் நான் தாக்கப்பட்டேன், அதை நான் மறக்க மாட்டேன். காங்கிரஸிடம் உங்களிடம் ஒரு எம்.எல்.ஏ கூட இல்லை. நான் உங்களுக்கு இரண்டு இடங்கள் (வங்காளத்தில்) கொடுத்து வெற்றி பெற உதவுகிறேன் என்று சொன்னேன். இல்லை, இன்னும் வேண்டும் என்றார்கள். ‘நீங்கள் முதலில் சி.பி.ஐ (எம்) கட்சியை விட்டு வெளியேறுங்கள்’ என்று அவர்களிடம் கூறினேன். வங்காள மக்களுக்கு வன்கொடுமை செய்த சி.பி.ஐ (எம்) உடன் என்னால் இருக்க முடியாது. அதை நான் மறக்கவில்லை, மக்களும் மறக்கவில்லை” என்று இந்த கூட்டத்தில் மம்தா  பானர்ஜி கூறினார்.



காங்கிரசுக்கு பெர்ஹாம்பூரிலிருந்து ஆதிர் சௌத்ரி மற்றும் மால்டா தக்ஷினில் இருந்து மறைந்த கனி கான் சௌத்ரியின் சகோதரர் அபு ஹசீம் கான் சவுத்ரி ஆகிய 2 எம்.பி.க்கள் உள்ளனர்.



மால்டா மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.க்கள் இருவரும் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்றும் முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார். “பர்கத் தா (கனி கான் சவுத்ரி, முன்னாள் மால்டா எம்.பி மற்றும் ரயில்வே அமைச்சர்) சில வேலைகளைச் செய்தார். அவ்வளவுதான்.” என்று கூறினார்.



மேலும், காங்கிரசும் சி.பி.ஐ (எம்) இரண்டு கட்சிகளும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு களத்தை சரி செய்ய ஒன்றாகச் சேர்ந்து போராடுகின்றன என்று டி.எம்.சி தலைவர் கூறினார். “பா.ஜ.க-வுக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் மட்டுமே போராடுகிறது. பா.ஜ.க-வுக்கு எதிராக நாங்கள் தொடர்ந்து போராடி வருகிறோம். 365 நாட்களும் உங்களுடன் இருக்கிறோம். நாங்கள் உங்களுக்காக எல்லாவற்றையும் செய்தோம். ஒவ்வொரு முறை தேர்தல் வரும்போதும் சில பறவைகள் பாடத் தொடங்குகின்றன, சில கட்சிகள் இங்கு வந்து டி.எம்.சி-க்கு எதிராக கொச்சையான வார்த்தைகளைப் பரப்புகின்றன” என்று மம்தா பானர்ஜி கூறினார்.



முன்னதாக, ஜனவரி 24-ம் தேதி ராகுலின் யாத்திரை முதல் முறையாக வங்காளத்தில் நுழைவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, மம்தா பானர்ஜி மேற்கு வங்க மாநிலத்தில் டி.எம்.சி தனித்துச் போட்டியிடும் என்றும், மக்களவைத் தேர்தலுக்குப் பிறகுதான் கூட்டணிக்கு அழைப்பு விடுக்கும் என்றும் கூறியிருந்தார்.



இதற்கு இணையாக, கூட்டணி முறிவுக்கு மேற்கு வங்க காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி மீது டி.எம்.சி தலைமை குற்றம் சாட்டி வருகிறது.



மம்தா பானர்ஜி இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கம் என்று ராகுல் காந்தி கூறியதன் மூலம், பேச்சுவார்த்தைக்கான கதவை திறந்து வைத்துள்ளதாக காங்கிரஸ் தலைமை கூறியுள்ளது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

4 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

4 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

4 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

4 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

4 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

4 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை