Skip to main content

பெண்ணின் வயிற்றிலிருந்து பெருமளவு கொழுப்பு அகற்றப்பட்ட சம்பவம் :இலங்கை மருத்துவரின் சாதனை!

Jan 14, 2024 36 views Posted By : YarlSri TV
Image

பெண்ணின் வயிற்றிலிருந்து பெருமளவு கொழுப்பு அகற்றப்பட்ட சம்பவம் :இலங்கை மருத்துவரின் சாதனை! 

 லிபோசக்சன் சத்திரசிகிச்சை மூலம் பெண்ணொருவரின் வயிற்றில் இருந்து 13.5 லீற்றர் கொழுப்பை வெற்றிகரமாக அகற்றியுள்ளார்.இலங்கையின் சிறப்பு சத்திரசிகிச்சை நிபுணர் டொக்டர் ஆனந்த ஜெயவர்தன, 



கண்டியில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், பாணந்துறையைச் சேர்ந்த 61 வயதான ஓய்வுபெற்ற ஆசிரியை ஒருவர் சத்திரசிகிச்சைக்குப் பின்னர் எவ்வித சிக்கல்களும் இன்றி இருப்பதாகவும் டொக்டர் ஜெயவர்தன குறிப்பிட்டிருந்தார் .



"அபாயங்கள் இருந்தபோதிலும், நாங்கள் 13.5 லீற்றர் கொழுப்பை வெற்றிகரமாக அகற்றினோம், இது மிகப் பெரிய அளவு.



சராசரியாக, 4 முதல் 5 லீற்றர்கள் இதேபோன்ற அறுவை சிகிச்சைகள் மூலம் உலகில் வேறு இடங்களில் அகற்றப்பட்டுள்ளன. இவ்வளவு கொழுப்பைக் கொண்ட அரிதான நிகழ்வு இது” என்று அவர் மேலும் தெரிவித்திருந்தார்.  


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

10 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை