Skip to main content

ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் பஸில்.

Nov 06, 2023 25 views Posted By : YarlSri TV
Image

ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் பஸில். 

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுன சார்பில் பஸில் ராஜபக்சவை களமிறக்க பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் தயாராகி வருகின்றனர்.



பஸில் ராஜபக்ச அமெரிக்க பிரஜாவுரிமையைத் துறந்து உடனே ஜனாதிபதித் தேர்தல் களத்தில் இறங்குமாறும் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக பஸில் தரப்பினர் தெரிவிக்கின்றார்கள்



இந்நிலையில் பொதுஜன பெரமுன இதுவரை தமது வேட்பாளர் தொடர்பில் எவ்வித உறுதியான தீர்மானங்கள் எடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.



அதேவேளை பொதுஜன பெரமுனவில் அங்கம் வகிக்கும் ஒருதரப்பு ரணில் விக்கிரமசிங்கவை நிறுத்த வேண்டும் என்றும், இன்னொரு தரப்பு பிரபல தொழிலதிபர் தம்மிக்க பெரேராவை நிறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கின்றார்கள்



  ஜனாதிபதி வேட்பாளருக்குத் தகுதியானவர் பஸில் ராஜபக்ஷதான் என்று மொட்டுவின் சிரேஷ்ட உறுப்பினர்கள்  கூறுகின்றார்கள்.



 இதனால் அமெரிக்கப் பிரஜாவுரிமையை இரத்துச் செய்துவிட்டு உடனே  களத்தில் குதிக்குமாறு மொட்டுவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பஸிலுக்கு அழுத்தம் கொடுத்து வருவதை அறியமுடிகின்றது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை