Skip to main content

திடீர் எரிவாயுவின் விலை அதிகரிப்பு

Nov 04, 2023 29 views Posted By : YarlSri TV
Image

திடீர் எரிவாயுவின் விலை அதிகரிப்பு 

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் அறிவித்துள்ளார் .



அந்த வகையில் , 12.5 கிலோ கிராம் எடையுடைய எரிவாயு சிலிண்டரின் விலை 95 ரூபாவாகவும், 12.5 கிலோ கிராம் எடையுடைய லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 3,565 ஆகும்.



மேலும், 5 கிலோ கிராம் எடையுடைய லிட்ரோ எரிவாயு சிலிண்டர் 38 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, அதன் புதிய விலை 1,431 ஆகும்.



மேலும், 2.3 கிலோ கிராம் எடையுடைய லிட்ரோ எரிவாயு சிலிண்டர் 18 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, அதன் புதிய விலை 688 ஆகும்.



உலகச் சந்தையில் விலை அதிகரிப்பு காரணமாக இவ்வாறு விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் மேலும் குறிப்பிட்டார்


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை