Skip to main content

ஆர்யா - கௌதம் கார்த்திக்கின் Mr.X படம் தொடர்பாக வெளியான சுவாரசியத் தகவல்!

Aug 21, 2023 51 views Posted By : YarlSri TV
Image

ஆர்யா - கௌதம் கார்த்திக்கின் Mr.X படம் தொடர்பாக வெளியான சுவாரசியத் தகவல்! 

ஆர்யா நடிப்பில் உருவாகும் மிஸ்டர்.எக்ஸ் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது.



விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த எஃப்.ஐ.ஆர் திரைப்படத்தை இயக்கிய மனு ஆனந்த் தற்போது மிஸ்டர்.எக்ஸ் என்ற திரைப்படத்தை இயக்குகிறார். பிரின்ஸ் பிக்சர் நிறுவனம் தயாரிக்கும் அந்த படத்தில் ஆர்யாவுடன் கௌதம் கார்த்தி, சரத்குமார், மஞ்சு வாரியர் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.



மனு ஆனந்தின் முதல் படம் போல இந்த திரைப்படமும் திரில்லர் வகையில் உருவாகும் என கூறப்படுகிறது.  மிஸ்டர் எக்ஸ் திரைப்படத்திற்கான அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. இந்தப் படத்துக்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வந்தன.



இந்த நிலையில் இன்று மிஸ்டர் எக்ஸ் படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.  அதில் ஆர்யா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களின் காட்சிகள் படமாக்கப்பட்டன. ஆர்யா நடிப்பில் இறுதியாக வெளியான சில படங்கள் ரசிகர்களை கவரவில்லை. இதனால் மிஸ்டர் எக்ஸ் திரைப்படத்தை அவர் அதிகம் எதிர்பார்த்துள்ளார்.


Categories: சினிமா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை