Skip to main content

எரிபொருட்களின் விலைகள் 120 ரூபா வரை குறையுமா?

Mar 28, 2023 67 views Posted By : YarlSri TV
Image

எரிபொருட்களின் விலைகள் 120 ரூபா வரை குறையுமா? 

நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான எரிபொருள் வகைகளும் லீட்டர் ஒன்றுக்கு 120 ரூபா வரையில் குறைக்கப்பட முடியும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தொழிற்சங்கமான ஐக்கிய தொழிற்சங்க ஒன்றியத்தின் பேச்சாளர் ஆனந்த பாலித தெரிவித்தார்.



மேலும், 95 ஒக்டேன் ரக பெட்ரோல் ஒரு லீட்டரின் சில்லறை விலை குறைந்தபட்சம் 125 ரூபாவினால் குறைக்கப்பட முடியும் என்றும், மண்ணெண்ணை விலையை லீட்டர் ஒன்றுக்கு 110 ரூபாவினால் குறைக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி எரிபொருட்களின் விலைகள் குறிப்பிடத்தக்களவு குறைக்கப்படும் என முன்னதாக எரிசக்தி அமைச்சர் பாராளுமன்றில் குறிப்பிட்டிருந்தார்.



இந்த குறிப்பிடத்தக்களவு 100 ரூபாவிற்கு அதிகமாகும் என தெரிவித்துள்ளார்.



எரிபொருட்களின் விலையை குறைப்பதன் மூலம் மின்சாரக் கட்டணங்களையும் நியாயமான அளவில் குறைக்கப்பட முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை