Skip to main content

விலங்குணவு உற்பத்திக்காக சோளத்தை இறக்குமதி செய்ய அனுமதி!

Sep 23, 2022 70 views Posted By : YarlSri TV
Image

விலங்குணவு உற்பத்திக்காக சோளத்தை இறக்குமதி செய்ய அனுமதி! 

விலங்குணவு உற்பத்திக்காக வருடாந்தம் 600000 மெறரிக்தொன் சோளம் தேவைப்படுகின்றது. எனினும் தற்போது சந்தையில் சோள தட்டுப்பாடு நிலவுகின்றது.



எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் உணவு உற்பத்திக் கம்பனிகளுக்கு விலங்குணவு உற்பத்தி மூலப்பொருள் விநியோகத்தர்கள் மூலம் 225000 மெட்ரிக்தொன் சோளம் இறக்குமதி செய்வதற்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.



எனினும் தற்போது நிலவுகின்ற அந்நிய செலாவணிப் பற்றாக்குறையால் ஜூன் மாத இறுதி வரைக்கும் 38000 மெட்ரிக்தொன் சோளம் மாத்திரமே இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.



தற்போது உள்ளுர் சந்தையில் ஒரு கிலோ சோளம் 220 ரூபா வரை அதிகரித்துள்ளதுடன் அதனால் விலங்குணவுகளின் விலையும் அதிகரித்துள்ளது. அதற்கமைய கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை அதிகரித்துள்ளது.



கோழி வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் கோழிக் குஞ்சுகளை உற்பத்திகளை மேற்கொள்ளாமல் முட்டையை விற்பனை செய்தல் மற்றும் கோழி வளர்ப்பிலிருந்து விலகுதல் போன்றவற்றால் எதிர்காலத்தில் கால்நடை வளர்ப்புத் துறையில் பாரிய நெருக்கடிகள் ஏற்படக்கூடுமென அவதானிக்கப்பட்டுள்ளது.



அதனால் கால்நடை உற்பத்திகள் மற்றும் சுகாதார திணைக்களத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ள விலங்குணவு உற்பத்திக்குத் தேவையான சோளம் அல்லது ஏனைய பொருத்தமான தானிய வகைகளை 25000 மெட்ரிக்தொன் இறக்குமதி செய்வதற்கு உணவு ஊக்குவிப்பு சபைக்கு அனுமதி வழங்குவதற்காக விவசாய அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை