Skip to main content

மன்னாரில் இடம்பெற்ற இலங்கையின் 76 ஆவது சுதந்திர தின நிகழ்வு!

Feb 04, 2024 33 views Posted By : YarlSri TV
Image

மன்னாரில் இடம்பெற்ற இலங்கையின் 76 ஆவது சுதந்திர தின நிகழ்வு! 

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 76 வது சுதந்திர தின   நிகழ்வுகள் நாடு முழுவதும் இன்று (4) நடைபெற்று வரும் நிலையில் மன்னார் மாவட்டத்திலும் சுதந்திர தின நிகழ்வுகள் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கனகேஸ்வரன்  தலைமையில் நடைபெற்றது.



இன்று ஞாயிற்றுக்கிழமை (4) காலை 8.30 மணியளவில் மன்னார் பிரதான பாலத்தில் சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்வு ஆரம்பமானது.



மன்னார் பொலிஸார்,பாடசாலை மாணவர்களின் வாத்திய குழுவினர்,மற்றும் மாவட்டச் செயலக அதிகாரிகள் இணைந்து அணிவகுப்பு மரியாதையை முன்னெடுத்தனர்.



மன்னார் பிரதான பாலத்தடியில் ஆரம்பமான அணிவகுப்பு மரியாதை மன்னார் மாவட்டச் செயலகத்தை சென்றடைந்தது.



குறித்த அணிவகுப்பு மரியாதையை மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் முப்படை அதிகாரிகள் ஏற்றுக்கொண்டனர்.



அதனைத் தொடர்ந்து மன்னார் மாவட்ட செயலகத்தில் வைத்து மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தேசியக்கொடியை ஏற்றி வைத்து நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.



இதன் போது தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது . நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த படைவீரர்கள் மற்றும் ஏனையவர்களுக்கு 2 நிமிட மௌன பிரார்த்தனையும் இடம்பெற்றது.



-பின்னர் சமாதான புறாக்கள் மற்றும் சமாதான பொலுன் பறக்கவிடப்பட்டது.சர்வமத தலைவர்களின் ஆசி மற்றும் சர்வமத்தை பிரதி பலிக்கும் நிகழ்வுகள் இடம் பெற்றது.



பின்னர் அரசாங்க அதிபரினால் சுதந்திர தின உரை நிகழ்த்தப்பட்டது.இறுதியில் இலங்கையின் 76 ஆவது சுதந்திர தினத்தையொட்டி மாவட்ட செயலக வளாகத்தில் மரக்கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டது.



குறித்த நிகழ்வில் பிரதேசச் செயலாளர்கள்,திணைக்கள தலைவர்கள்,இராணுவம்,பொலிஸ்,கடற்படை,அதிகாரிகள்,சர்வமத தலைவார்கள்,உள்ளடங்களாக பலர் கலந்து கொண்ணமை குறிப்பிடத்தக்கது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை