Skip to main content

இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள ஆதரவு வழங்கத் தயார்!

Sep 23, 2022 67 views Posted By : YarlSri TV
Image

இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள ஆதரவு வழங்கத் தயார்! 

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான உதவியைப் பெறுவதற்கு தமது ஆதரவை வழங்குவதாக வெளிநாட்டுத் தூதுவர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் உறுதியளித்தனர்.



ஜனாதிபதியின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற கடன் மறுசீரமைப்பு மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்திற்கான தூதுவர்கள் கூட்டத்தில்  அவர்கள் இந்த உறுதிமொழியை வழங்கினர்.



23 நாடுகளைச் சேர்ந்த தூதர்கள் Paris  கிளப்பின் உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்கள் அல்லாதவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.



இந்த நிலையில் இருந்து இலங்கை மீள முடியும் என வெளிநாட்டு தூதுவர்கள் இதன்போது நம்பிக்கை வெளியிட்டனர்.



நாடு எதிர்நோக்கும் பொருளாதார சவாலை வெற்றிகொள்வதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த முயற்சியில் சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.



மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க (IMF) மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோர் சர்வதேச நாணய நிதியத்துடன்  நடத்தப்பட்ட கலந்துரையாடல்களின் முன்னேற்றம் மற்றும் இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து விளக்கினர்.



அடுத்த சந்ததியினருக்கு சிறந்த எதிர்காலத்தை உறுதி செய்வதற்காக நாடு எதிர்கொள்ள வேண்டிய சவால் இது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.



வெளிப்படைத்தன்மை மற்றும் சமத்துவம் எல்லா நேரங்களிலும் உறுதி செய்யப்பட்டு பராமரிக்கப்படும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.



இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர்களான ரஞ்சித் சியம்பலாபிட்டியஇ தாரக பாலசூரிய, ஷெஹான் சேமசிங்க, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர், ஜனாதிபதி செயலக பிரதானி சாகல ரத்நாயக்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன மற்றும் அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை