Skip to main content

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு விசேட புத்தகக் கண்காட்சி!

Sep 22, 2022 55 views Posted By : YarlSri TV
Image

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு விசேட புத்தகக் கண்காட்சி! 

இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள அரிய மற்றும் வரலாற்று மதிப்புமிக்க புத்தகங்கள் மற்றும் ஆவணங்கள் உள்ளடங்கிய விசேட புத்தகக் கண்காட்சியொன்றை இலங்கையின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடத்த ஏற்பாடு செய்திருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.



ஜனாதிபதி இன்று பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டப வளாகத்தில் நடைபெற்றுவரும் 23ஆவது கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சியை பார்வையிடுவதற்காக சென்றிருந்தார்.



இதன்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.



சுதந்திர தினத்தை முன்னிட்டு நடத்தப்படவுள்ள புத்தகக் கண்காட்சிக்கு இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தின் ஒத்துழைப்பை பெற எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.



இன்று காலை கண்காட்சி வளாகத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி,  இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் சமந்த இந்தீவர உள்ளிட்டோர் வரவேற்றனர்.



இந்த வருட புத்தகக் கண்காட்சியில் 400 இற்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு புத்தக வெளியீட்டாளர்களின் விற்பனைக் கூடங்கள் இடம்பெற்றுள்ளன.



ஜனாதிபதி அவற்றை நேரில் சென்று பார்வையிட்டதுடன் புத்தக வெளியீட்டாளர்கள் மற்றும் எழுத்தாளர்களுடனும் சிறிது நேரம் உரையாடினார்.



கண்காட்சி வளாகத்திற்கு வருகை தந்திருந்த பொதுமக்களுடன்இ ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிநேகபூர்வ உரையாடலிலும் ஈடுபட்டிருந்தார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை