Skip to main content

மட்டகளப்பில் காணாமல் போனோர் தொடர்பான விசாரணை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது!

Oct 16, 2022 50 views Posted By : YarlSri TV
Image

மட்டகளப்பில் காணாமல் போனோர் தொடர்பான விசாரணை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது! 

மட்டகளப்பில் நேற்று மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தை அடுத்து, காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் நடத்திய பிராந்திய விசாரணை தற்காலிக மாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.



மட்டக்களப்பு நகரில் அதிகாரிகளினால் விசாரணைகள் நடத்தப்பட்டு வரும் பிரதேச செயலக அலுவலகத்தின் நுழைவாயிலை மறித்து, பாதிக்கப்பட்டவரகளிடம் விசாரணை நடத்துவதை நிறுத்துமாறு அவரகள் கோரியிருந்தனர்.



காணாமல் போனவர்களுக்கு இழப்பீடாக பணம் தேவையில்லை, அவர்கள் எங்கிருக்கிறார்கள், அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறியவே உறவினர்கள் விரும்புவதாக கோவிந்தன் சுட்டிகாட்டியுள்ளார்.



இந்நிலையில் ஆர்ப்பாட்டம் காரணமாக இடைநிறுத்தப்படுவதற்கு முன்னர் மட்டக்களப்பில் மூன்று நாட்களுக்கு விசாரணைகளை மேற்கொண்ட அதிகாரிகள் கிட்டத்தட்ட 270 வழக்குகளை முடித்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.



அத்துடன் அதிகாரிகளின் பாதுகாப்பு கருதி மட்டக்களப்பில் விசாரணைகளை தற்காலிகமாக இடைநிறுத்த வேண்டியிருந்தாலும், எதிர்காலத்தில் விசாரணைகள் தொடரும் என காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் தலைவர் மகேஷ; கட்டுலந்த தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

17 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை