Skip to main content

அமைதி பேச்சுவார்த்தையை தொடர வேண்டும் : ஜெலன்ஸ்கி மீண்டும் வலியுறுத்தல்

Mar 26, 2022 78 views Posted By : YarlSri TV
Image

அமைதி பேச்சுவார்த்தையை தொடர வேண்டும் : ஜெலன்ஸ்கி மீண்டும் வலியுறுத்தல் 

ரஷ்யாவின் கடுமையான தாக்குதலுக்கு உக்ரைன் பதிலடி கொடுத்து வருகிறது. ரஷ்யா இந்தப் போரில் பல்லாயிரக்கணக்கான வீரர்களை களப்பலியாக கொடுத்துள்ளது.



உக்ரைன் போரில் ரஷ்யா கிட்டத்தட்ட 2 லட்சம் வீரர்களை களமிறக்கி உள்ளது. அவர்களில் 15 ஆயிரம் பேர் வரையில் இந்தப் போரில் கொல்லப்பட்டுள்ளனர் என உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.



இந் நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ரஷ்யாவிடம் அமைதி பேச்சுவார்த்தையை தொடர வேண்டும் என மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.



இதுதொடர்பாக, நேற்று இரவு தொலைக்காட்சியில் உரையாற்றிய அதிபர் ஜெலன்ஸ்கி, அமைதிப் பேச்சுவார்த்தையை தொடர வேண்டும்.



அதே சமயம், அமைதிக்காக உக்ரைன் தனது எந்த ஒரு பகுதியையும் விட்டுக்கொடுக்க ஒப்புக்கொள்ளாது எனவும் உறுதிபட தெரிவித்துள்ளார்.   


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

22 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை