Skip to main content

ஒரே நாளில் இலங்கையில் அச்சிடப்பட்ட பெருந்தொகையான பணம்

Mar 16, 2022 76 views Posted By : YarlSri TV
Image

ஒரே நாளில் இலங்கையில் அச்சிடப்பட்ட பெருந்தொகையான பணம் 

இலங்கை மத்திய வங்கி நேற்றுமுன்தினம் 2,227 கோடி ரூபா பணம் அச்சிட்டுள்ளது.



இலங்கை மத்திய வங்கியிடம் நேற்றுமுன்தினம் திறைசேரி உண்டியல் பத்திரங்களின் தொகை ஆயிரத்து 543.97 பில்லியன் ரூபாவாக காணப்பட்டுள்ளது.



ஆனால், இந்தத் தொகை கடந்த 11ஆம் திகதி ஆயிரத்து 521.69 பில்லியன் ரூபாவாக காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



அதன்படி, இலங்கை மத்திய வங்கியின் வசம் உள்ள திறைசேரி உண்டியல் பத்திரங்களின் தொகை நேற்றுமுன்தினம் 22.27 பில்லியன் ரூபாவால் அதாவது 2,227 கோடி ரூபாவால் அதிகரித்துள்ளது.



இலங்கை மத்திய வங்கி 22.27 பில்லியன் ரூபா அல்லது 2,227 கோடி ரூபா பணம் அச்சிட்டுள்ளது.



மத்திய வங்கி புதிய நாணயத்தை வெளியிடுவதற்கு “பணம் அச்சிடுதல்” என்ற பொதுவான சொல்லையும் பயன்படுத்துகிறது. அவ்வாறாயின் நேற்றுமுன்தினம் மாத்திரம் 2 ஆயிரத்து 227 கோடி ரூபாவை மத்திய வங்கி அச்சிட்டுள்ளது.  



 


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை