Skip to main content

இன்று முதல் மாணவர்களுக்கு கல்வி அமைச்சு விடுத்த நடவடிக்கை

Mar 14, 2022 109 views Posted By : YarlSri TV
Image

இன்று முதல் மாணவர்களுக்கு கல்வி அமைச்சு விடுத்த நடவடிக்கை 

இன்று முதல் மாணவர்களை வழமையான முறையில் பாடசாலைகளுக்கு அழைப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.



இதற்கான சுற்றுநிருபம், சகல கல்வி அதிகாரிகளுக்கும், கல்வி அமைச்சின் செயலாளர் கபில சி பெரேராவினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.



நாட்டின் நிலையினை கருத்திற்கொண்டு மாணவர்கள் இதுவரை குழுக்களாக பாடசாலைக்கு அழைக்கப்பட்டிருந்தனர். இதன்படி, 20 மாணவர்களை உள்ளடக்கிய வகுப்புகள் தினமும் நடத்தப்பட்டதுடன், 21 முதல் 40 வரையில் மாணவர்கள் எண்ணிக்கையை கொண்ட வகுப்புகள் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, வெவ்வேறு வாரங்களில் தனித்தனியாக அழைக்கப்பட்டிருந்தனர்.



இதன்போது 40 மாணவர்களுக்கு மேல் உள்ள வகுப்புகள் 3 சம பிரிவுகளாக பிரித்து கற்றல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.



இந்நிலையில், இன்று முதல் சகல மாணவர்களையும் வழமையான முறையில் பாடசாலைகளுக்கு அழைப்பதற்கு அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.



எதிர்காலத்தில் பாடசாலைகளில் கொவிட்-19 தொற்று பரவல் ஏற்படும் சந்தர்ப்பத்தில், வலய கல்வி பணிப்பாளரின் அனுமதிக்கு அமைய தீர்மானங்களை மேற்கொள்ள முடியும் என கல்வி அமைச்சின் செயலாளரினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள சுற்று நிருபத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை