தி.மு.க மா.செ கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு!


டிசம்பர் 9 தேதி வெற்றி கழக தலைவர் விஜய் புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் பேச உள்ள பொதுக்கூட்டத்திற்கு தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் யாருக்கும் அனுமதி கிடையாது. க்யூ.ஆர் கோடுடன் வழங்கப்படும் பாஸ் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படாது என போலீசார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

புதுச்சேரி உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் தமிழக வெற்றிக் கழக பொதுக்கூட்டம் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் த.வெ.க. தலைவர் விஜய் கலந்துகொண்டு பேச உள்ளார். இதற்காக விஜய், பனையூரில் உள்ள வீட்டில் இருந்து அன்று காலை 8 மணிக்கு கார் மூலம் கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி வருகிறார். அதன்பின் காலை 10.30 மணி அளவில் ஹெலிபேடு மைதானத்திற்கு வரும் விஜய், அவரது பிரசார வேனில் நின்றபடி பொதுமக்கள் மத்தியில் உரையாற்றுகிறார். கூட்டம் முடிந்தவுடன் அவர், மீண்டும் காரில் புறப்பட்டு சென்னை செல்கிறார்.

கூட்டத்திற்கு வருகை தரும் பொதுமக்கள் ஹெலிபேடு நுழைவு வாயில் வழியாக அனுமதிக்கப்பட உள்ளனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் அவர்களின் பாஸ்களை சோதனை செய்து அனுமதிக்க உள்ளனர். கூட்டத்தில் பங்கேற்க வரும் த.வெ.க. தலைவர் விஜய் வந்து செல்வதற்கு தனியாக தற்காலிக நுழைவு வாயில் அமைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஹெலிபேடு மைதானத்தில் பள்ளமான இடங்களை பொக்லைன் எந்திரம் மூலம் மணல் கொட்டி சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. த.வெ.க. பொதுக்கூட்டத்திற்கு பாதுகாப்பு பிரச்சினையை கருத்தில் கொண்டு 1,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

அத்துடன் பொதுக்கூட்டத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை போலீசார் விதித்துள்ளனர். அதன்படி பொதுக்கூட்டத்திற்கு 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். அவர்களுக்கு ‘கியூ-ஆர்’ கோடுடன் கூடிய பாஸ் வழங்க வேண்டும். தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு பாஸ் வழங்கக்கூடாது. அனைவருக்கும் அடிப்படை வசதிகள் குடிநீர், கழிவறை உள்ளிட்டவைகள் இருக்க வேண்டும். பொதுமக்களுக்கு பாதுகாப்புக்கு அளிக்கும் வகையில் மருத்துவக் குழுவினர், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்டவை முன்னெச்சரிக்கையாக செய்திருக்க வேண்டும்.

முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கு பாஸ் வழங்கக்கூடாது. நாற்காலிகள் போட அனுமதி இல்லை. மேடை போடக் கூடாது. குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் தொண்டர்கள் பிரிந்து நிற்க தனித்தனி தடுப்புகள் அமைக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த கட்டுப்பாடுகளை கட்டாயம் பின்பற்றவும் போலீசாரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Reviews

0 %

User Score

0 ratings
Rate This

Sharing

Leave your comment

Your email address will not be published. Required fields are marked *