ஓ.பி.எஸ் – அண்ணாமலை கோவையில் திடீர் சந்திப்பு!

அண்ணாமலை என்.டி.ஏ. கூட்டணியில் வந்து இணையுமாறு வற்புறுத்தி வருவதாகவும் டிடிவி தினகரன் கூறியிருந்த நிலையில், தற்போது ஒரு திருமண நிகழ்வில், ஒ.பன்னீர்செல்வம் – அண்ணாமலை சந்திப்பு நடைபெற்றுள்ளது.
கோவையில் அ.தி.மு.க தொண்டர்கள் மீட்புக் குழுவின் கோவை மாநகர செயலாளர் மோகன்ராஜ் இல்ல விழா நடந்தது. இதில் தொண்டர்கள் மீட்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். இந்த விழாவில் பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையும் கலந்து கொண்டார்.
தமிழக அரசியல் களம் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத அளவுக்கு நாளுக்கு நாள் பல சுவாரஸ்யமாக நிகழ்வுகள் நடைபற்று வருகிறது. ஒரு பக்கம் பிரச்சாரங்கள் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், மறுபக்கம், கூட்டணி கட்சிகளை இணைத்துக்கொள்வது, தக்கவைத்துக்கொள்வது மாற்று கட்சியை கூட்டணிக்கு அழைப்பது என தொடர்ந்து வேலைகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், அ.தி.மு.க. பா.ஜ.க இருக்கும் என்.டி.ஏ கூட்டணியில் இருந்து டிடிவி தினகரன், ஒ.பன்னீர்செல்வம் ஆகியோர் வெளியேறிவிட்டனர்.
இவர்களை மீண்டும் கூட்டணிக்குள் இணைக்க வேண்டும் என்று பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை ஒரு முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவ்வப்போது அண்ணாமலை தன்னிடம் பேசுவதாகவும், நண்பர் என்ற முறையில் தன்னை மீண்டும் என்.டி.ஏ. கூட்டணியில் வந்து இணையுமாறு வற்புறுத்தி வருவதாகவும் டிடிவி தினகரன் கூறியிருந்த நிலையில், தற்போது ஒரு திருமண நிகழ்வில், ஒ.பன்னீர்செல்வம் – அண்ணாமலை சந்திப்பு நடைபெற்றுள்ளது. அதிமுக கட்சியில் இருந்து வெளியில் வந்தவர்கள் இணைந்து தொண்டர்கள் மீட்பு குழு என்ற ஒரு குழுவை நடத்தி வருகின்றனர்.
இந்த குழுவில் இருக்கும் கோவை கோவை மாநகர செயலாளர் மோகன்ராஜ் இல்ல விழா நடந்தது. இதில் தொண்டர்கள் மீட்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். இந்த விழாவில் பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையும் கலந்து கொண்டார். அப்போது திருமண வீட்டில் இருவரும் சிறிது நேரம் கலந்துரையாடியதாக கூறப்படுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் வெளியேறிய நிலையில், பா.ஜ.க தலைவர்கள் மீண்டும் அவரை அழைத்து பேசுவதும், தமிழகத்தில் பா.ஜ.க நிர்வாகிகள் அவரை சந்தித்து பேசுவதும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஓ.பன்னீர்செல்வத்தை – சந்தித்த புகைப்படங்களை தனது எக்ஸ் தளத்தில் பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பகிர்ந்து உள்ளார்.







