Skip to main content

அதிகரிக்கும் கொரோனா பரவல் - ஆஸ்திரேலியாவில் ஊரடங்கு நீட்டிப்பு...

Aug 31, 2021 123 views Posted By : YarlSri TV
Image

அதிகரிக்கும் கொரோனா பரவல் - ஆஸ்திரேலியாவில் ஊரடங்கு நீட்டிப்பு... 

ஆஸ்திரேலியாவில் நேற்று ஒரே நாளில் 1,305 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 50 ஆயிரத்தைக் கடந்தது.



கொரோனா வைரஸ் இரண்டாவது அலையின் கோரப்பிடியில் ஆஸ்திரேலியா சிக்கியுள்ளது. டெல்டா கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் அந்த நாடு திணறி வருகிறது.



இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் 2-வது மிகப்பெரிய நகரமான மெல்போர்னில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் அங்கு முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.



70 லட்சம் மக்கள் தொகை கொண்ட மெல்போர்ன் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்கனவே தொடர்ந்து 4 வாரங்களாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தற்போது மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. 



இதுதொடர்பாக, விக்டோரியா மாகாணத்தின் பிரதமர் டான் ஆண்ட்ரூஸ் கூறுகையில் ‘‘ஊரடங்கை திரும்பப் பெற முடியாத அளவுக்கு மெல்போர்ன் நகரில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஊரடங்குக்கு முன்பான சுதந்திரத்தை நினைத்து மகிழ்ச்சி கொள்கிறோம். மீண்டும் அந்த நாட்கள் திரும்பி வர வேண்டும் என தீவிரமாக விரும்புகிறோம்’’ என கூறினார்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை