Skip to main content

காபூல் விமான நிலையத்தை பாதுகாத்தது ஏன்? - அதிபர் ஜோ பைடன் விளக்கம்...

Aug 21, 2021 140 views Posted By : YarlSri TV
Image

காபூல் விமான நிலையத்தை பாதுகாத்தது ஏன்? - அதிபர் ஜோ பைடன் விளக்கம்... 

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க விமானப் படையின் சி-17 குளோப்மாஸ்டர் விமானம் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆப்கானியர்கள் 640 பேரை சுமந்து சென்றதாக தகவல் வெளியானது. ஆனால் அப்போது கொண்டு செல்லப்பட்ட 183 குழந்தைகள் கணக்கில் சேர்க்கப்படவில்லை. ஆக மொத்தம், ஒரு விமானத்தில் ஒரே சமயத்தில் 823 பேர் அழைத்துச் செல்லப்பட்டிருக்கின்றனர்.



இந்த குளோப்மாஸ்டர் விமானத்தைப் பொறுத்தவரை இது ஒரு புதிய சாதனை. இதில் இதற்கு முன் ஒரே நேரத்தில் இவ்வளவு பேர் பயணம் செய்ததில்லை என்று அமெரிக்க விமானப் படையின் ஏர் மொபிலிட்டி கமாண்ட் நேற்று தெரிவித்தது. 



ஆப்கானிஸ்தானில் இருந்து ஆட்களை வெளியேற்ற தினமும் 20 முதல் 30 முறை விமானங்களை இயக்கவும், அதன்மூலம் தினசரி சுமார் 5 ஆயிரம் பேரை வெளியேற்றவும் அமெரிக்க பாதுகாப்புத் துறை திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.



இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:



ராணுவ விமானம் மட்டுமல்ல, பிறநாட்டு விமானங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆப்கானிஸ்தானில் பாதிக்கபட்ட மக்களை  விமான மூலம் வெளியேற்ற  காபூல் விமான நிலையத்தைப் பாதுகாத்தோம்.



இந்த வெளியேற்றும் பணி ஆபத்தானது, இது ஆயுதப் படைகளுக்கு ஆபத்துகளை உருவாக்கி உள்ளது. இறுதி முடிவு என்னவாக இருக்கும். அது என்னவாக இருக்கும் என்பதை என்னால் உறுதியளிக்க முடியாது.



ஜூலை மாதத்திலிருந்து 18,000- க்கும் அதிகமான மக்களை நாங்கள் ஏற்கனவே வெளியேற்றியுள்ளோம்.  (காபூலில் இருந்து) ஆகஸ்ட் 14 முதல் எங்களது ராணுவ விமானப் பயணம் தொடங்கி நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை