Skip to main content

ஆப்கானிஸ்தான் மக்கள் இந்தியா வர இ-விசா கட்டாயம்: மத்திய அரசு!

Aug 26, 2021 143 views Posted By : YarlSri TV
Image

ஆப்கானிஸ்தான் மக்கள் இந்தியா வர இ-விசா கட்டாயம்: மத்திய அரசு! 

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், அங்கிருந்து இந்தியா வர விரும்புபவர்களுக்காக மின்னணு விசாவை (இ விசா) மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.



இந்தநிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கை வருமாறு:-



ஆப்கானிஸ்தான் மக்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட விசாக்கள், அவர்கள் தற்போது இந்தியாவில் இல்லாதபட்சத்தில் உடனடியாக ரத்து செய்யப்படுகின்றன. இனிமேல், மின்னணு விசாவில்தான் ஆப்கானிஸ்தான் மக்கள் இந்தியாவுக்கு வர வேண்டும். மத வேறுபாடு இல்லாமல் யார் வேண்டுமானாலும் மின்னணு விசாவுக்கு விண்ணப்பிக்கலாம். ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய தூதரகங்கள் மூடப்பட்டு இருப்பதால், டெல்லியில் விசா விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும்.



இவ்வாறு அவர் கூறினார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை