Skip to main content

வானதி சீனிவாசன் வைத்த கோரிக்கை : முதல்வர் ஸ்டாலின் அளித்த பதிலும், விளக்கமும்!..

Aug 18, 2021 94 views Posted By : YarlSri TV
Image

வானதி சீனிவாசன் வைத்த கோரிக்கை : முதல்வர் ஸ்டாலின் அளித்த பதிலும், விளக்கமும்!.. 

சட்டப்பேரவையில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் பேசும் போது, கன்னி என்கின்ற வார்த்தை இளம் வயது பெண்மையை குறிக்கும் வார்த்தை; என்னைப் பொறுத்தவரை ‘அறிமுகப்பேச்சு’ என குறிப்பிட்டால் நாகரீகமாக இருக்கும். வேளாண் நிதி நிலை அறிக்கைக்கு வாழ்த்துகள், பாராட்டுக்கள்; தேங்கா எண்ணெய் ரேசன் கடை மூலமாக விற்கலாம் என்ற அறிவிப்பு இல்லாதது ஏமாற்றமளிக்கிறது. கோவையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.



இதற்கு பதிலளித்து சட்டப்பேரவையில் பேசிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் , “பாஜக கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் வானதி சீனிவாசன் பேசுகிறபோது மெட்ரோ ரயில் திட்டத்தை பற்றி குறிப்பிட்டு காட்டி கோவைக்கு மத்திய அரசோடு கலந்து பேசி முடிவு செய்யப்படும் என்று ஒரு செய்தியைச் சொல்லி இருக்கிறார்களே அது வேதனை அளிக்கிறது என்று பொருள்பட இங்கே ஒரு கருத்தைச் சொன்னார்கள். நம்முடைய மாண்புமிகு நிதியமைச்சர் அவர்களுக்கும் அதற்கு விளக்கம் தந்திருக்கிறார்கள். மெட்ரோ ரயில் திட்டத்தை பொருத்தவரையில் ஒன்று அரசினுடைய உதவியோடு ஒன்றிய அரசு, நிதி உதவி பெற்று தான் அந்த திட்டத்தை நிறைவேற்ற முடியும். அப்படி தான் இதுவரையில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. நேற்றைக்கு கூட ஒன்றிய அரசிடம் இருந்து எங்களுக்கு வந்திருக்கிற செய்தி இன்றைக்கு இரண்டாம் கட்டத்திற்கு அனுமதியை ஒன்றிய அரசு தமிழக அரசுக்கு வழங்கி இருக்கிறது என்று செய்தி எனக்கு கிடைத்திருக்கிறது.



நான் ஏற்கனவே டெல்லிக்கு சென்று பாரத பிரதமரை சந்தித்தபோது இது குறித்து நான் விளக்கமாக சொல்லி இருக்கிறேன் .அழுத்தம் கொடுத்து பேசி இருக்கிறேன். அந்த அழுத்தத்தின் அடிப்படையில்தான் நேற்றைக்கு அதற்கான அனுமதி கிடைத்திருக்கிறது. மாண்புமிகு உறுப்பினர் வானதி சீனிவாசன் சொன்னதுபோல கோவைக்கும் நிச்சயமாக அழுத்தம் கொடுப்போம். கவலைப்பட வேண்டாம். கோவைக்கு மட்டுமல்ல மதுரை குமரி கொடுத்திருக்கிறோம், ஆகையால் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டுமோ அந்த முறையிலேயே நிச்சயமாக நிறைவேற்றப்படும்.



பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் பேசுகிறபோது , கோவையில் இருக்கக்கூடிய மத்திய சிறையை மாற்றங்களை உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். செம்மொழி மாநாட்டை திராவிட முன்னேற்றக் கழக அரசு நடத்திய போதே ஏற்கனவே கலைஞர் அவர்களின் இதற்கான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள். ஆனால் அதன் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு 10 ஆண்டுகாலம் அவர்கள் அதைப் பற்றி யோசிக்கவில்லை, சிந்திக்கவில்லை, எனவே உங்களுடைய கோரிக்கை நிச்சயமாக நிறைவேற்றப்படும் இந்த ஆட்சியில் என்று தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.முன்னதாக பேசிய வானதி சீனிவாசன், சமீப காலமாக மத்திய அரசை ஒன்றிய அரசு என்றழைக்கின்ற போக்கு நிலவி வருகிறது . ரோஜாவை வேறு பெயரிட்டு அழைத்தாலும் அதன் வாசனையை மாற்ற முடியாது என்றார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

21 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை