Skip to main content

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டணம் மாற்றியமைப்பு!

Aug 12, 2021 95 views Posted By : YarlSri TV
Image

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டணம் மாற்றியமைப்பு! 

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை மாற்றியமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது



தமிழகத்தில் 1,964 பேருக்கு நேற்று ஒரேநாளில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25லட்சத்து 91 ஆயிரத்து 94ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரேநாளில் 28பேர் உயிரிழந்த நிலையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34ஆயிரத்து 395 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் குறைந்து வரும் கொரோனா தொற்றைக் கருத்தில் கொண்டு, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், கொரோனா சிகிச்சைக்கான கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அரசாணையை வெளியிட்டுள்ளது.



அதில், தனியார் மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கான கொரோனா சிகிச்சை கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. தீவிரமில்லாத ஆக்சிஜன் அல்லாத படுக்கை வசதிக்கு ரூ.3,000 கட்டணமாக நிர்ணயிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தீவிரமில்லாத ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை வசதிக்கு ரூ.7,000 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் வென்டிலேட்டருடன் கூடிய தீவிர சிகிச்சைக்கு ரூ.15,000 கட்டணம் செய்யப்பட்டுள்ளது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை