Skip to main content

புதிய கல்விக்கொள்கையின் ஓராண்டு நிறைவு- பிரதமர் மோடி 29ந் தேதி நாட்டு மக்களுக்கு உரை

Jul 27, 2021 164 views Posted By : YarlSri TV
Image

புதிய கல்விக்கொள்கையின் ஓராண்டு நிறைவு- பிரதமர் மோடி 29ந் தேதி நாட்டு மக்களுக்கு உரை 

1986-ம் ஆண்டு வகுக்கப்பட்ட தேசிய கல்விக்கொள்கைக்கு பதிலாக மத்திய பா.ஜனதா அரசு புதிய கல்விக்கொள்கையை உருவாக்கி உள்ளது. இந்த கொள்கைக்கு கடந்த ஆண்டு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. இந்த கல்விக்கொள்கை அமலுக்கு வந்து ஓராண்டு நிறைவடைவதையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வருகிற 29-ந்தேதி உரையாற்றுவதாக கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.



இது தொடர்பாக தனது டுவிட்டர் தளத்தில் அவர் கூறுகையில், ‘கற்றல் வரம்பை மாற்றுவதற்கும், கல்வியை முழுமையாக்குவதற்கும், சுயசார்பு இந்தியா திட்டத்துக்கு வலுவான அடித்தளங்களை உருவாக்குவதற்கும் ஒரு வழிகாட்டும் தத்துவமாக புதிய தேசிய கல்விக்கொள்கை விளங்குகிறது. இந்த கொள்கையின் கீழ் சீர்திருத்தங்களை மேற்கொண்டு ஓராண்டு நிறைவடைவதையொட்டி வருகிற 29-ந்தேதி பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.



இந்த கொள்கையை அமல்படுத்துவதில் தற்போது வரையிலான முன்னேற்றம், இந்த கொள்கையில் அடுத்தடுத்து வரவிருக்கும் திட்டங்களுக்கான செயல்திட்டம் உள்ளிட்டவை குறித்து பிரதமர் மோடி தனது உரையில் தெரிவிப்பார் என அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

10 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை