Skip to main content

மோடியும், அமித்ஷாவும் ஊழலுக்கு மட்டுமே துணை போகிறவர்கள்” – கே.எஸ்.அழகிரி

Jul 29, 2021 88 views Posted By : YarlSri TV
Image

மோடியும், அமித்ஷாவும் ஊழலுக்கு மட்டுமே துணை போகிறவர்கள்” – கே.எஸ்.அழகிரி 

ராகேஷ் அஸ்தனாவை டெல்லி காவல் துறை ஆணையராக மோடி அரசு நியமித்ததின் மூலம் தாங்கள் ஊழலுக்கு மட்டுமே துணை போகிறவர்கள் என்பதைப் பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் வெளிப்படுத்தியுள்ளனர் என்று கே.எஸ்.அழகிரி குற்றஞ்சாட்டி உள்ளார்.



இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தனது ட்விட்டர் பக்கத்தில், “ரபேல் ஒப்பந்தம் ஊழல் தொடர்பான ஆவணங்களை சேகரித்ததால் தான் சி.பி.ஐ. இயக்குநர் அலோக் வர்மா மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக, மோடி அரசு மீது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். மோடி அரசின் நடவடிக்கைகளும் இந்த குற்றச்சாட்டை உறுதி செய்வதாகவே அமைந்தன.அலோக் வர்மா மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க பிரதமர் மோடி தலைமையில் நடந்த தேர்வுக் கூட்டத்தில், சி.பி.ஐ. இயக்குநர் பதவியிலிருந்து அலோக் வர்மாவை நீக்கி ஜனநாயகப் படுகொலை அரங்கேறியது.



அதேசமயம், கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தனாவுக்கு எல்லைப் பாதுகாப்புப் படையின் இயக்குநர் ஜெனரல் பதவி அளிக்கப்பட்டது.2018ல் மொயின்குரேஷி ஊழல் வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் தொழிலதிபர் சனாசதீஷ், இடைத்தரகர்கள் மூலம் ராகேஷ் அஸ்தனாவுக்கு 2.95கோடி அளவுக்கு லஞ்சம் கொடுத்ததாக, ஸ்டெர்லிங் பயோடெக் மருந்து தயாரிப்பு நிறுவனத்திடம் ராகேஷ் அஸ்தனா லஞ்சம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டுகள் அப்படியே உள்ளன.



வரும் 31 ஆம் தேதி பணியிலிருந்து ஓய்வு பெறவிருந்த ராகேஷ் அஸ்தனாவை, டெல்லி காவல் துறை ஆணையராக மோடி அரசு நியமித்ததின் மூலம், தாங்கள் ஊழலுக்கு மட்டுமே துணை போகிறவர்கள் என்பதைப் பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் வெளிப்படுத்தியுள்ளனர்.ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒருவரை அரவணைப்பதன் மூலம் பதவியில் தொடரும் தார்மீக உரிமையைப் பிரதமர் மோடியும் அமித்ஷாவும் இழந்து விட்டார்கள்” என்று பதிவிட்டுள்ளார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை