Skip to main content

கடின உழைப்பால் உயர்ந்த நாயகன்... சூர்யா பிறந்தநாள் ஸ்பெஷல்!

Jul 24, 2021 18 views Posted By : YarlSri TV
Image

கடின உழைப்பால் உயர்ந்த நாயகன்... சூர்யா பிறந்தநாள் ஸ்பெஷல்! 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா, இவர் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். தனது கடின உழைப்பால் தரமான படங்களில் நடித்து தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கி இருக்கிறார். இது அவருக்கு சாதாரணமாகக் கிடைத்ததல்ல. கிட்டத்தட்ட 24 ஆண்டுகள் தொடர் போராட்டம் என்றே சொல்லலாம். மேலும் சமூகத்தின் மீதான அக்கறை, கல்விக்கு ஆதரவாக குரல் கொடுப்பது என்று அவருக்கு ரசிகர்களைத் தாண்டி பொது மக்களின் அன்பையும் மதிப்பையும் பெற்றுத் தந்திருக்கின்றன.நட்சத்திர அந்தஸ்துபுகழ்பெற்ற நடிகரான சிவகுமாரின் மகனாகப் பிறந்தாலும் தனக்கென்று ஒரு இடத்தைப் போராடி உழைத்துப் பெற்றிருக்கிறார் சூர்யா. தொடக்க ஆண்டுகள் போராட்டம் மிக்கவையாக இருந்தன. படிப்படியாக உழைத்து குறைகளைக் கடந்து நிறைகளை அதிகரித்துப் பல வகையான படங்களில் நடித்து நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றிருக்கிறார்.வியக்கவைக்கும் மெனக்கெடல்தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்துக்கு கச்சிதமாகப் பொருந்த உடல்ரீதியாகவும் உள்ளத்தாலும் உருமாற சூர்யா அளிக்கும் மெனக்கெடல் வியக்கவைக்கும். 30 வயதுகளில் 60 வயது முதியவராக 'வாரணம் ஆயிரம்' படத்தில் நடித்தபோது அனைவரும் அவரை அப்படியே ஏற்றுக்கொள்ளும் விதத்தில் இருந்தார். அதே படத்தில் ராணுவ வீரராக நடிப்பதற்காக இரவு பகலாக உழைத்து சிக்ஸ் பேக் வைத்தார். மேலும், அயன், 7 ஆம் அறிவு படங்களிலும் சிக்ஸ் பேக் வைத்திருந்தார். இவரது வியக்க வைக்கும் மெனக்கெடல் மற்றும் கட்டுக்கோப்பான உடலமைப்பு இளைஞர்கள் மற்றும் இளம் நடிகர்களுக்கு முன்மாதிரியாக இருக்கிறது.இயக்குனர்களின் நடிகர்24 ஆண்டு திரைவாழ்வில் பல இயக்குனர்களுடன் பணியாற்றியிருக்கிறார் சூர்யா. மணிரத்னம், வசந்த், விக்ரமன், பாலா, அமீர், கெளதம் மேனன், ஏ.ஆர்.முருகதாஸ், செல்வராகவன், கே.எஸ்.ரவிகுமார், ஹரி, கே.வி.ஆனந்த், லிங்குசாமி, வெங்கட் பிரபு, பாண்டிராஜ் என முக்கியமான இயக்குனர்கள் பலருடன் பணியாற்றியுள்ளார். இவர்களில் சூர்யாவுடன் அதிகபட்சமாக ஐந்து படங்களில் ஹரி பணியாற்றியுள்ளார். கே.வி.ஆனந்துடன் மூன்று படங்களிலும், வசந்த், பாலா, கெளதம் மேனனுடன் தலா இரண்டு படங்களிலும் பணியாற்றியுள்ளார். விக்ரம் குமார், விக்னேஷ் சிவன் போன்ற இளம் இயக்குனர்களுடனும் பணியாற்றியுள்ளார். சுதா கொங்கராவுடன் 'சூரரைப் போற்று' படத்தில் பணியாற்றியிருக்கிறார். தமிழ் சினிமாவில் ஒரு பெண் இயக்குனரின் படத்தில் நட்சத்திர நடிகர் ஒருவர் நடித்திருப்பது இதுவே முதல் முறை.மல்ட்டிஸ்டாரர் நடிகர்சூர்யாவின் முதல் படமான 'நேருக்கு நேர்' இரட்டை நாயகர்கள் படம். அதில் விஜய்யும் நடித்திருந்தார். அதற்கடுத்து விஜயகாந்துடன் 'பெரியண்ணா' மீண்டும் விஜய்யுடன் 'ப்ரண்ட்ஸ்', விக்ரமுடன் 'பிதாமகன், மோகன்லால், ஆர்யாவுடன் 'காப்பான்' என தமிழில் அதிக மல்டிஸ்டாரர் படங்களில் நடித்த நட்சத்திர நடிகர் சூர்யாதான். அதேபோல் 'குசேலன்', 'அவன் இவன்', 'மன்மதன் அம்பு', 'கோ', 'சென்னையில் ஒரு நாள்', 'கடைக்குட்டி சிங்கம்' என மற்ற நடிகர்களின் படங்களில் ஒரு சில காட்சிகளில் வந்து செல்லும் கெஸ்ட் ரோல்களிலும் சூர்யா நடித்திருக்கிறார்.நிகழ்ச்சி தொகுப்பாளர்திரைப்பட நட்சத்திரங்கள் திரையைத் தாண்டி அதிகம் தலைகாட்டக் கூடாது என்ற விதியை உடைத்தவர் சூர்யா. அதிகமாக பொது நிகழ்ச்சிகளிலும், கலை விழாக்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பவர். தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கோடிஸ்வரன் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பணியாற்றினார். அதன் மூலமாகவும் வீடுகளிலும் மக்களின் உள்ளங்களிலும் நுழைந்தார்.தரமான தயாரிப்பாளர்2015-ல் 2டி என்னும் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார் சூர்யா. தன் மனைவியான ஜோதிகாவை கதையின் நாயகியாக்கி '36 வயதினிலே', 'மகளிர் மட்டும்', 'ஜாக்பாட்', 'பொன்மகள் வந்தாள்' போன்ற படங்களைத் தயாரித்தார். அதன் மூலம் ஜோதிகா என்னும் திறமை வாய்ந்த நடிகையின் மறு அறிமுகமும் வெற்றிகரமான இரண்டாம் இன்னிங்ஸும் சாத்தியமானது. இதைத் தவிர 'பசங்க 2', '24', 'கடைக்குட்டி சிங்கம்' 'உறியடி 2' என பல வகையான தரமான படங்களைத் தயாரித்திருக்கிறார். 'கடுகு', 'சில்லுக் கருப்பட்டி' போன்ற தரமான சிறுமுதலீட்டுப் படங்களை வாங்கி வெளியிட்டிருக்கிறார். சமூகநலப் பணிகள்எய்ட்ஸ் விழிப்புணர்வுப் பிரச்சாரம் உட்பட பல சமூகநல நோக்கம் கொண்ட திட்டங்களில் ஆர்வத்துடன் பங்கேற்பவரான சூர்யா 2006-ல் அகரம் அறக்கட்டளையை நிறுவினார். அதன் மூலம் இன்றுவரை ஆயிரக்கணக்கான ஏழைக் குழந்தைகளும் ஒடுக்கப்பட்ட சமூகப் பிரிவுகளைச் சேர்ந்த குழந்தைகளும் உயர்கல்வி பெற்று முன்னேறியிருக்கிறார்கள். அகரம் அறக்கட்டளை இன்னும் பல சமூகநலத் திட்டங்களுக்கு தன் சிறகை விரித்திருக்கிறது. அதோடு கல்வி உள்ளிட்ட சமூகப் பிரச்சினைகள் தொடர்பாகத் துணிச்சலாகக் குரல்கொடுப்பவராகவும் இருக்கிறார் சூர்யா. மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையை விமர்சித்து அவர் வெளியிட்ட நீண்ட அறிக்கை பரவலான பாராட்டுகளைப் பெற்றது. சமீபத்தில் ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக முதல் ஆளாக சூர்யாதான் குரல் கொடுத்தார்.இவ்வாறு நடிகர், தயாரிப்பாளர், சமூக அக்கறை கொண்டவர் என பல முகங்கள் கொண்டு தமிழ் சினிமாவில் ஜொலித்து வரும் சூர்யா, இன்னும் பல சாதனைகள் படைத்து நலமுடன் வாழ மாலைமலர் இணையதளம் சார்பாக வாழ்த்துகிறோம்.   


Categories: சினிமா
Image
தற்போதைய செய்திகள்

உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 23 கோடியை தாண்டியது.! 47.31 லட்சம் பேர் உயிரிழப்பு!

21 Hours ago

4 நாள் சுற்றுப் பயணமாக அமெரிக்கா சென்றார் மோடி: துணை அதிபர் கமலாவுடன் இன்று பேச்சு!

21 Hours ago

கூட்டமைப்பினரைச் சந்திக்க மறுக்கும் கோட்டாபய!

21 Hours ago

ஆஸ்திரேலியாவில் நேற்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

21 Hours ago

இந்தியாவை தலிபான்களை போல ஆக்க நாங்கள் உங்களை அனுமதிக்க மாட்டோம்.. மோடி, அமித் ஷாவை தாக்கிய மம்தா!

21 Hours ago

இந்திய ஜனாதிபதியிடம் நற்சான்றுப் பத்திரத்தைக் கையளித்தார் மொறகொட!...

21 Hours ago

மதுரையில் காரில் கடத்திய போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல் – 10 பேர் கைது!..

21 Hours ago

புலம்பெயர் அமைப்புகளைத் தடை செய்துவிட்டு பேச்சு மேசைக்கு அழைப்பது வெற்றுப் பேச்சே - கஜேந்திரகுமார்

21 Hours ago

ஈரோடு மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவு!.

21 Hours ago

தடுப்பூசி போடாமையினால் 89 வீதமான இறப்பு!

21 Hours ago

தருமபுரியில் உணவகத்தில் காலாவதியான 50 கிலோ இறைச்சி பறிமுதல்!

2 Days ago

மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு! – டலஸ் உறுதி

2 Days ago

ஒளிப்பதிவாளர் தந்தை மரணம் - நேரில் சென்று ஆறுதல் கூறிய அருண் விஜய்!

2 Days ago

அசாதுதின் ஓவைசி இல்லம் மீது தாக்குதல் - 5 பேர் கைது!

2 Days ago

தேர்தல் முறையை மாற்றுவதை ஏற்கவே முடியாது!

2 Days ago

நெடுஞ்சாலை திட்டங்களில் சீன நிறுவனங்கள் முதலீடா? - நிதின் கட்கரி விளக்கம்!

2 Days ago

தடுப்பூசிகள் ஏற்றுமதி என்ற இந்தியாவின் முடிவு வரவேற்கத்தக்கது - உலக சுகாதார அமைப்பு!

2 Days ago

பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக ‘பாகுபலி 2’ பட பட்ஜெட்டை விட அதிக சம்பளம் வாங்கும் சல்மான் கான்!

3 Days ago

தடுப்பூசி போட்ட வெளிநாட்டினரை அனுமதிக்க அமெரிக்கா முடிவு!

3 Days ago

ஜயந்த கெட்டகொட நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்!

3 Days ago

சோனியா காந்தி 4 நாள் பயணமாக சிம்லா சென்றார்!

3 Days ago

ரஷ்ய பாராளுமன்ற தேர்தலில் அதிபர் புதின் கட்சி அமோக வெற்றி!

3 Days ago

கிளிநொச்சியில் கொரோனாவால் வயோதிபர் மரணம்!

3 Days ago

19 வருட கனவு நனவானது - நடிகர் ஜெய் நெகிழ்ச்சி...

3 Days ago

வவுனியாவில் இருபது நாட்களில் 2222 பேருக்கு கொரோனா : 106 பேர் மரணம்!

3 Days ago

107 வயதில் உலக சாதனை படைத்த ஜப்பானிய இரட்டை சகோதரிகள்!

3 Days ago

தலைநகரில் விஜய், அஜித் இருவரும் நேரில் சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.!

3 Days ago

ஆப்கானிஸ்தான் பள்ளிகளில் மாணவிகளை அனுமதிக்க மறுப்பு - பஞ்ச்சீர் கூட்டணி படை எதிர்ப்பு!

4 Days ago

நெல்சன் இயக்கத்தில் நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

4 Days ago

ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளருடன் ஜனாதிபதி சந்திப்பு!

4 Days ago

மத்திய அரசை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் போராட்டம்!

4 Days ago

தஞ்சம் புகுந்த ஹைத்தி அகதிகளை விமானங்களில் ஏற்றி திருப்பி அனுப்பும் அமெரிக்கா!

4 Days ago

பட்டமளிப்பை முழுமையாக நிராகரிக்கிறோம்-யாழ் பல்கலை மாணவர் ஒன்றியம்!

4 Days ago

நடிகை மீரா மிதுனின் ஜாமீனுக்காக காத்திருக்கும் ‘பேய காணோம்’ படக்குழு!

4 Days ago

ஒவ்வொரு ஆண்டும் பணியின்போது இத்தனை லட்சம் பேர் இறக்கிறார்களா? அதிர்ச்சி தகவல்

4 Days ago

பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார் சவுதி அரேபிய வெளியுறவு மந்திரி!

4 Days ago

டி.வி நிகழ்ச்சியில் போட்டியாளரின் கன்னத்தை கடித்து சர்ச்சையில் சிக்கிய பூர்ணா!

4 Days ago

திமுக- அதிமுக வேட்பாளர்கள் தேர்வு: ஓரிரு நாளில் பட்டியல் வெளியாகிறது!

5 Days ago

யாழ்ப்பாணத்தில் வீட்டில் உயிரிழந்த இருவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி!

5 Days ago

ஆப்கானிஸ்தானில் பள்ளிகள் திறப்பு: மாணவிகளுக்கு அனுமதி இல்லை - தலிபான்கள் அறிவிப்பு...

5 Days ago

தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியது!

5 Days ago

ஹம்பாந்தோட்டை நகர முதல்வர் எராஜ் பெர்னாண்டோ பிணையில் விடுதலை!

5 Days ago

கொரோனா குமார்’ ஆக களமிறங்கும் சிம்பு!

5 Days ago

மகளிர் நல அமைச்சகத்தை கலைத்த தலிபான்- அதற்கு என்ன பெயர் மாற்றியுள்ளார்கள் தெரியுமா?

6 Days ago

பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் ராஜினாமா!

6 Days ago

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டி பலத்த சேதமடைந்துள்ளது!

6 Days ago

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டி பலத்த சேதமடைந்துள்ளது!

6 Days ago

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டி பலத்த சேதமடைந்துள்ளது!

6 Days ago

காபூலில் வான் தாக்குதலில் பொதுமக்கள் 10 பேர் பலி- மன்னிப்பு கேட்ட அமெரிக்கா!

6 Days ago

கவர்னராக பதவியேற்ற ஆர்.என்.ரவிக்கு மு.க.ஸ்டாலின், எடப்பாடி நேரில் வாழ்த்து!

6 Days ago

யாழில் 260 இலட்சம் செலவில் அபிவிருத்தி திட்டம் – டக்ளஸ்

6 Days ago

இந்தியாவில் ஒரே நாளில் 2.25 கோடி தடுப்பூசி செலுத்தி புதிய சாதனை...

6 Days ago

இங்கிலாந்து இளவரசர் பிலிப்பின் உயில் 90 ஆண்டுகள் சீல் வைக்க உத்தரவு!

6 Days ago

சீனாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த பூகம்பம், 3 பேரின் உயிரை பறித்துள்ளது!

7 Days ago

சீனாவின் ஆதிக்கத்தை முறியடிக்க அதிரடி அமெரிக்கா புது கூட்டமைப்பு!

7 Days ago

எந்த வீட்ல தான் சண்டை இல்ல... விஜய் உடனான பிரச்சனை குறித்து மனம் திறந்த எஸ்.ஏ.சந்திரசேகர்!

7 Days ago

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வரலாற்று சாதனை சாதாரண மக்கள் 4 பேர் விண்வெளியில் சுற்றுலா!

7 Days ago

ஐ.எஸ். அமைப்பின் முக்கிய தலைவர் சுட்டுக் கொலை - இமானுவேல் மெக்ரான்

7 Days ago

நீட் தேர்வு உயிரிழப்புகளுக்கு யார் காரணம்? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்!

7 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை