Skip to main content

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு மதிப்பெண் : முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சிபிஎஸ்இ நிர்வாகம்

Jul 22, 2021 145 views Posted By : YarlSri TV
Image

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு மதிப்பெண் : முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சிபிஎஸ்இ நிர்வாகம் 

சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்களை கணக்கிடுவதற்கான கால அவகாசத்தை சிபிஎஸ்இ நிர்வாகம் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.



கொரோனா தொற்று காரணமாக தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு 10ம் வகுப்பு , 11ம் வகுப்புகளில் தலா 30 சதவீத மதிப்பெண்கள் மற்றும் 12 ஆம் வகுப்பில் 40 சதவீத மதிப்பெண்கள் என கணக்கிடு செய்ய முடிவெடுக்கப்பட்டது. அத்துடன் சிபிஎஸ்இ பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் ஜூலை 31-ஆம் தேதி வெளியிடப்படும் என சிபிஎஸ்இ அறிவித்தது.



இந்நிலையில் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண்களை வழங்குவதற்கான கால அவகாசம் வருகின்ற 25 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி கால அவகாசத்தை நீட்டிப்பதாக சிபிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சன்யம் பரத்வாஜ் அறிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர் சிபிஎஸ்இ பள்ளிகள் வரும் 25-ஆம் தேதிக்குள் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண்களே கணக்கிட வேண்டும். அப்படி கணக்கிடாத பள்ளிகளின் முடிவுகள் தாமதமாக வெளிவரக் கூடும் என்று கூறியுள்ளார். வருகின்ற 21 ஆம் தேதிக்குள்ளாக சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என மத்திய அரசு தெரிவித்திருந்த நிலையில் தற்போது கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.



 



 



 

Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை