Skip to main content

டெல்டா வைரஸ் பரவல் எதிரொலி... மாஸ்க் அணிவதை மீண்டும் கட்டாயமாக்கியது இஸ்ரேல்!

Jun 26, 2021 164 views Posted By : YarlSri TV
Image

டெல்டா வைரஸ் பரவல் எதிரொலி... மாஸ்க் அணிவதை மீண்டும் கட்டாயமாக்கியது இஸ்ரேல்! 

இஸ்ரேல் நாட்டில் கொரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் காரணமாக பாதிப்பு வெகுவாகக் குறைந்தது. மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டதை அடுத்து, கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டுள்ளன. பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன.  மாஸ்க் விதிமுறைகளும் படிப்படியாக தளர்த்தப்பட்டன.



கொரோனா வைரஸ் பரவல் மிகவும் குறைந்ததையடுத்து, பொது இடங்களில் உள்ள உள்அரங்கங்களில், மக்கள் முக கவசம் அணிய தேவையில்லை என கடந்த 15ம் தேதி சுகாதாரத்துறை தெரிவித்தது. இதனால் பொதுமக்கள் உற்சாகமடைந்தனர்.



இந்நிலையில், கடந்த 4 தினங்களாக புதிய பாதிப்பு 100ஐ  தாண்டியது. நேற்று 227 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. எனவே, வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், மீண்டும் மாஸ்க் தொடர்பான விதிமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. மக்கள் இனி பொது இடங்களில் உள்ள உள்அரங்கங்களுக்கு சென்றால் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.



இந்தியாவில் முதன்முதலில் காணப்பட்ட கொரோனா வைரசின் டெல்டா மாறுபாடு காரணமாக, இஸ்ரேலில் பாதிப்புகள் அதிகரித்திருக்கலாம் என தொற்றுநோய் பணிக்குழு தலைவர் நாச்மேன் ஆஷ் கூறினார்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை