Skip to main content

குறுவை நெல் சாகுபடி தொகுப்பு திட்டம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

Jun 17, 2021 168 views Posted By : YarlSri TV
Image

குறுவை நெல் சாகுபடி தொகுப்பு திட்டம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு! 

குறுவை நெல் சாகுபடி தொகுப்பு திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:



* டெல்டா மாவட்ட விவசாயிகளுக்காக ரூ.61.00 கோடி மதிப்பிலான தொகுப்பு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.



* தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டம் முழுவதும் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

 



* கடலூர், அரியலூர், திருச்சி மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளிலும் திட்டம் செயல்படுத்தப்படும்.



* குறுவை நெல் சாகுபடிக்காக இடுபொருட்கள், வேளாண் இயந்திரங்கள் மானியத்தில் வழங்கப்படும்.



* 2,870 மெ.டன் சான்று நெல் விதைகள் 24,000 ஏக்கர் பரப்பில் பசுந்தாளுர விதைகள் மானிய விலையில் தரப்படும்.

 



* 1.90 லட்சம் ஏக்கர் பரப்பில் முழு மானியத்தில் ரசாயன உரங்கள் என இடுபொருட்களுக்கு ரூ.50 கோடி நிதியுதவி அளிக்கப்படும்.



 



இதையும் படியுங்கள்... டெல்லியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு





* வேளாண் இயந்திரங்கள் வழங்க, பண்ணைக்குட்டைகள் அமைக்க ரூ.11.09 கோடி நிதியுதவி அளிக்கப்படும்.



இவ்வாறு அவர் கூறி உள்ளார்.



3.50 லட்சம் ஏக்கரை விட கூடுதல் பரப்பில் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



குறுவை நெல் சாகுபடி திட்டத்தால் 2.07 லட்சம் விவசாயிகள் பயனடைவர்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை