Skip to main content

சிறைக் கைதிகள் இனிமேல் ‘சூம்’ ஊடாக உறவுகளுடன் பேச முடியும் - அமைச்சர் லொஹான் தெரிவிப்பு

Jun 14, 2021 169 views Posted By : YarlSri TV
Image

சிறைக் கைதிகள் இனிமேல் ‘சூம்’ ஊடாக உறவுகளுடன் பேச முடியும் - அமைச்சர் லொஹான் தெரிவிப்பு 

இலங்கை சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளுக்கு தமது உறவுகளைச் சந்திக்கும் சந்தர்ப்பத்தை ‘சூம்’ தொழில் நுட்பத்தின் ஊடாக ஏற்படுத்திக் கொடுக்கவுள்ளதாக சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் கைதிகள் மறுவாழ்வு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த ஊடகங்களிடம் தெரிவித்தார்.



சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியுடன் முதல் கட்டமாக, இந்தத் திட்டம் வெலிக்கடை, அங்குனகொலபெலஸ்ஸ, பூஸா உள்ளிட்ட 6 சிறைச்சாலைகளில் முன்னெடுக்கப்படவுள்ளன என்றும் அவர் கூறினார்.



கைதிகள் மத்தியில் கொரோனாத் தொற்று பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கையாக அறிமுகப்படுத்தப்படவுள்ள இந்தத் திட்டமானது, எதிர்காலத்தில் ஏனைய சிறைச்சாலைகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த குறிப்பிட்டார்.



கைதிகளின் சிறை இலக்கம் மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும் நேரத்தில் ‘சூம்’ தொழில்நுட்பத்தின் மூலம் அவர்கள் தமது உறவுகள் மற்றும் நண்பர்களுடன் பேச முடியும் எனவும் அவர் மேலும் கூறினார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை