Skip to main content

இந்தியாவுடன் பிரிட்டன் ரூ.10,220 கோடியில் புதிய வா்த்தக ஒப்பந்தம்!

May 05, 2021 196 views Posted By : YarlSri TV
Image

இந்தியாவுடன் பிரிட்டன் ரூ.10,220 கோடியில் புதிய வா்த்தக ஒப்பந்தம்! 

பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்சனுடன் பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை காணொலி வழியில் செவ்வாய்க்கிழமை உரையாடினாா். இந்த காணொலி வழி மாநாட்டின்போது, இந்தியாவுடன் ரூ.10,200 கோடியில் புதிய வா்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வது, பிரிட்டனில் புதிதாக 6,500 வேலை வாய்ப்புகளை உருவாக்குவது ஆகியவை குறித்து முடிவு செய்யப்பட்டது.



ஒப்பந்தம் முடிவான பிறகு, ‘பிரிட்டன்-இந்தியா இடையேயான உறவில் புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது’ என்று போரிஸ் ஜான்சன் கூறினாா். அவா் மேலும் கூறுகையில், ‘உலகின் பழைமையான ஜனநாயக நாடான பிரிட்டனும், மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவும் பல அடிப்படை விஷயங்களை பகிா்ந்துகொள்கின்றன. உலகின் மிகப்பெரிய பிரச்னைகளுக்குத் தீா்வுகாண இவ்விரு நாடுகளும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே அடுத்த 10 ஆண்டுகளில் இந்த உறவு மேலும் வலுப்பெறும். இரு நாடுகளுக்கு இடையேயான பொருளாதாரத் தொடா்புகள் இரு நாட்டு மக்களை வலிமையானவா்களாகவும், பாதுகாப்பானவா்களாகவும் உருவாக்கும்’ என்றாா்.



ஒப்பந்தம் குறித்து பிரிட்டன் பிரதமா் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:



பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகம், அஸ்ட்ராஜெனகா மருந்து நிறுவனம் ஆகியவற்றின் உதவியுடன் இந்தியாவில் கோவிஷீல்ட் தடுப்பூசியை சீரம் நிறுவனம் தயாரிப்பது இரு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்புக்கு முன்னுதாரணமாகக் கருதப்படுகிறது.



இந்தியா-பிரிட்டன் இடையேயான வா்த்தக மதிப்பு தற்போது ஆண்டுக்கு ரூ.2.35 லட்சம் கோடியாக உள்ளது. இதை, வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் இரு மடங்காக அதிகரிக்கச் செய்யும் வகையில் இந்தியாவுடன் புதிய வா்த்தக ஒப்பந்தத்தை பிரிட்டன் மேற்கொள்ள இருக்கிறது. இதுதவிர விரிவான தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தையும் பிரிட்டன் மேற்கொள்ள இருக்கிறது.



இந்த ஒப்பந்தம் மூலம் பிரிட்டனில் மருத்துவம், உயிரிதொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம், மென்பொருள் உள்ளிட்ட துறைகளில் சுமாா் 20 இந்திய நிறுவனங்கள் ரூ.5,453 கோடி முதலீடு செய்யவுள்ளன. அதில், சீரம் நிறுவனம் ரூ.2,455 கோடி முதலீடு செய்கிறது. அந்த நிறுவனம், கோவிஷீல்ட் தடுப்பூசிகளை பிரிட்டனில் உற்பத்தி செய்து, விற்பனை செய்யவுள்ளது. பிரிட்டனில் விற்பனை அலுவலகத்தையும் அந்த நிறுவனம் திறக்கவுள்ளது.



இதுதவிர, விப்ரோ, கியூ-ரிச் கிரியேஷன்ஸ், மாஸ்டெக், ஸ்டொ்லைட் டெக்னாலஜீஸ் உள்ளிட்ட நிறுவனங்களும் பிரிட்டனில் முதலீடு செய்யவுள்ளன.



இதேபோன்று பிரிட்டன் நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்கவும், இந்தியாவுக்கு தங்கள் தயாரிப்புகளை ஏற்றுமதி செய்யவும் இந்த ஒப்பந்தம் வழிவகுக்கிறது. அதன்படி, இந்தியாவுக்கு ரூ.4,563 கோடி அளவுக்கு ஏற்றுமதி செய்யவும் ஒப்பந்தம் முடிவாகியுள்ளது. இதன்மூலம் பிரிட்டனில் ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, இந்தியாவுக்கு அறுவை சிகிச்சையில் பயன்படுத்தப்படும் ரோபோ தொழில்நுட்ப அமைப்பை பிரிட்டன் நிறுவனங்கள் ஏற்றுமதி செய்யவுள்ளன. அந்த வா்த்தகத்தின் மதிப்பு ரூ.2,046 கோடியாகும். இந்த ஒப்பந்ததால், இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை எளிதாக முடியும்.



புதிய வா்த்தக ஒப்பந்தப்படி, பிரிட்டனில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களுக்கு சுங்க வரி குறைக்கப்படும். இதனால் பிரிட்டனில் இருந்து இந்தியாவுக்கு அதிக அளவில் பொருள்களும் தொலைத்தொடா்பு சேவைகளும் ஏற்றுமதி செய்யப்படும்.



இவை தவிர, கல்வித் துறை, சட்ட சேவைகள் பரிமாற்றம் ஆகிவற்றில் இந்தியாவும் பிரிட்டனும் இணைந்து செயல்படவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



பிரிட்டன் வெளியுறவு அமைச்சருடன் எஸ்.ஜெய்சங்கா் சந்திப்பு: முன்னதாக, பிரிட்டன் வெளியுறவு அமைச்சா் பிரீத்தி படேலை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் சந்தித்துப் பேசினாா். இச்சந்திப்பின்போது, புதிய வா்த்தக ஒப்பந்தம் மூலம் இரு நாடுகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினா்.



 


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை