Skip to main content

நிற்க வைத்து நேர்காணல்; திமுகவின் நாடகம் எடுபடாது என பாஜக கண்டனம்!

Mar 07, 2021 205 views Posted By : YarlSri TV
Image

நிற்க வைத்து நேர்காணல்; திமுகவின் நாடகம் எடுபடாது என பாஜக கண்டனம்! 

எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்பு வோருக்கான விருப்ப மனு வினியோகம் கடந்த மாதம் பிப்ரவரி 17ஆம் தேதி சென்னை அறிவாலயத்தில் தொடங்கியது. பிப்ரவரி 28ஆம் தேதி விருப்ப மனு தாக்கல் நிறைவடைந்தது. விருப்ப மனு தாக்கல் செய்தவர்களுக்கான நேர்காணல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் மார்ச் 2ஆம் தேதி தொடங்கி மார்ச் 6ஆம் தேதி நிறைவடைந்தது.



மார்ச் 6ஆம் தேதி நிறைவு நாள் நேர்காணலில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். அவரிடம் திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் நேர்காணல் நடத்தினார். அப்போது கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி. ஆர். பாலு, துணை பொதுச் செயலாளர் பொன்முடி, ஆ. ராசா உள்ளிட்ட பலரும் இருந்தனர்.



இந்த நேர்காணலின் போது உதயநிதி நின்றுகொண்டே பேசினார். ஆனால் முன்னதாக அன்பில் பொய்யாமொழி நாற்காலியில் அமர்ந்துகொண்டு பேசினார். உதயநிதி நின்றுகொண்டு பேசியதற்கும் அன்பில் பொய்யாமொழி நாற்காலியில் அமர்ந்து நேர்காணலில் பங்கேற்றதற்கும் எந்த பிரச்சனையும் இல்லை. இங்கே விவகாரமே தலித் ஒருவரை நேர்காணலில் நிற்க வைத்து கேள்வி கேட்டதுதான்.



இதுகுறித்து தமிழக பாஜகவின் கலை மற்றும் கலாச்சார பிரிவின் தலைவர் காயத்ரி ரகுராம், ‘’தலித் ஒருவரை நேற்று நிற்க வைத்து நேர்காணல் நடத்திய திமுகவின் சுய ரூபத்தை சமூக வலை தளங்கள் தோலுரித்ததை சரி செய்ய இன்று உதவாத நிதியையும் நிற்க வைத்து நேர்காணல் நடத்தும் திமுகவின் நாடகம் எடுபடாது என்பதை தலித்துக்கள் அறியாதவர்கள் அல்ல. முதலில் நீங்கள் நடத்தும் முரசொலியின் மூலப்பத்திரத்தை காட்டுங்கள்’’என்று சாடியிருக்கிறார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை