Skip to main content

புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் வசிக்கும் பகுதிகளில் பயணங்களை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை!

Feb 15, 2021 179 views Posted By : YarlSri TV
Image

புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் வசிக்கும் பகுதிகளில் பயணங்களை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை! 

புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் வசிக்கும் பகுதிகளில் பயணங்களை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கொவிட் – 19 தொற்று தொடர்பிலான இராஜாங்க அமைச்சர், வைத்தியர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.



குறித்த பகுதிகளுக்கு வெளியே வைரஸ் பரவுவதை குறைப்பதற்காக பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.



புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவுகின்றமை அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், தற்போதைய நிலமையின் கீழ் பொதுமக்கள் பாதுகாப்புடன் நடந்துகொள்வது அவசியம் என தெரிவித்துள்ளார்.



பிரித்தானியாவில் வேகமாக பரவிவரும் புதிய வகை கொரோனா வைரஸ், கொழும்பு, அவிசாவளை, வவுனியா மற்றும் பியகம ஆகிய பகுதிகளில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வைத்தியர் சந்திம ஜீவந்தர கடந்த வாரம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

2 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை