Skip to main content

மேல் மாகாணத்தில் அதி அபாய வலயமாக அடையாளம் காணப்பட்டுள்ள பிரதேசங்களில்-இன்று முதல் தடுப்பூசி – இராணுவத் தளபதி!

Feb 15, 2021 201 views Posted By : YarlSri TV
Image

மேல் மாகாணத்தில் அதி அபாய வலயமாக அடையாளம் காணப்பட்டுள்ள பிரதேசங்களில்-இன்று முதல் தடுப்பூசி – இராணுவத் தளபதி! 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அறிவுறுத்தலுக்கு அமைய குறித்த செயற்பாடுகள் இன்று (திங்கட்கிழமை) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.



பாதிக்கப்படக்கூடியவர்கள், அதிக ஆபத்துள்ள குழுக்கள் மற்றும் பொதுமக்களுடன் நெருக்கமாக பழகும் நபர்களை குறிவைத்து 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.



இந்தியாவில் இருந்து 5 இலட்சம் ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசிகளை இலவசமாகப் பெற்ற பின்னர், தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளை இலங்கை தொடங்கியது.



அதன்படி, முதற் கட்டமாக  சுகாதாரத் துறை, முப்படையினர், பொலிஸ் மற்றும் முன்கள ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.



 மீதமுள்ள 2 இலட்சத்து 50000 ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசிகளை பொது மக்களுக்கு செலுத்த கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை