Skip to main content

ரஷ்யா, ஈரான்- சீனாவின் கூட்டு போர் பயிற்சியினால் அமெரிக்காவுக்கு பிரச்சினை இல்லை!

Feb 11, 2021 219 views Posted By : YarlSri TV
Image

ரஷ்யா, ஈரான்- சீனாவின் கூட்டு போர் பயிற்சியினால் அமெரிக்காவுக்கு பிரச்சினை இல்லை! 

அமெரிக்காவின் எதிரி நாடுகளான ரஷ்யா, ஈரான் மற்றும் சீனா ஆகிய மூன்று நாடுகளின் கூட்டு போர் பயிற்சியினால், அமெரிக்காவுக்கு பிரச்சினை இல்லை என்பதனை அமெரிக்கா மறைமுகமாக கூறியுள்ளது.



இதுகுறித்து அமெரிக்க பாதுகாப்புத்துறை செய்தி தொடர்பாளர் ஜோன் கிர்பி கூறுகையில், ‘கடற்படைகளின் திறன்களை பயன்படுத்தும் பயிற்சி எதிர்பார்க்கப்பட வேண்டிய ஒன்று. இது போன்ற பயிற்சிகள், கடல்களின் சுதந்திரத்தை பாதுகாப்பதற்கும், உலகெங்கும் உள்ள எங்கள் கூட்டணிகள் மற்றும் கூட்டாண்மைகளை ஆதரிப்பதற்கும், நம்முடைய திறனுக்கு ஒரு தடையாக இருக்கும் என்று கருதவில்லை’ என கூறினார்.



ரஷ்யா, ஈரான் மற்றும் சீனா ஆகிய நாடுகள், இந்த மாத நடுப்பகுதியில் இந்திய பெருங்கடல் பகுதியில் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட போவதாக ஈரானுக்கான ரஷ்ய தூதர் லெவன் தாகரியன் அண்மையில் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



முன்னதாக குறித்த மூன்று நாடுகளும் 2019ஆம் ஆண்டு டிசம்பரில் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்டன. தற்போது இரண்டு ஆண்டுகளுக்குள் மீண்டும் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபடவுள்ளன.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை