Skip to main content

எகிப்தில் தங்க நாக்குடன் கண்டெடுக்கப்பட்ட மம்மி!

Feb 04, 2021 165 views Posted By : YarlSri TV
Image

எகிப்தில் தங்க நாக்குடன் கண்டெடுக்கப்பட்ட மம்மி! 

எகிப்தில்  2000  ஆண்டு பழமையான தங்க நாக்கினைக்  கொண்ட மம்மியொன்று அண்மையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது .



அந் நாட்டில் அலெக்சாண்ட்ரியா (Alexandria) பகுதியிலுள்ள  டபோசிரிஸ் மேக்னா (Taposiris Magna ) என்ற  கோயிலில்  தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்விலேயே   குறித்த மம்மி கண்டெடுக்கப்பட்டுள்ளது.



எகிப்தின் பழம்பெரும் கோயில்களில் கடந்த 10  வருடங்களாக  தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 16 புதையிடங்களைக் கண்டறிந்துள்ளனர்.



இந்த புதையிடங்களில் பல மம்மிகள் புதைந்திருந்தன. மார்பில் அணிகலன்கள் மற்றும் தலையில் கொம்புகள் வைத்த கிரீடத்தினாலும், மம்மிகள் அலங்கரிக்கப்பட்டிருந்தன. இருப்பினும் அவை சரியான முறையில் பதப்படுத்தப்படவில்லை.



அதில் ஒரு மம்மியின் வாயில் தங்க நாக்கு இருந்ததைக் கண்டு ஆராய்ச்சியாளர்கள் வியப்படைந்தனர்.



எகிப்து நாட்டு மக்கள் உயிரிழந்தபின் ஒசிரிஸ் என்ற எகிப்து கடவுளுடன் உரையாடுவார்கள் என்று நம்பப்பட்டது. ஒசிரிஸ், எகிப்து நாட்டின் பாதாள உலகின் ஆட்சியாளர் என்று கூறப்படுகிறது.



இந்நிலையில், இறந்தபின்னும் ஒசிரிஸுடன் எகிப்து மக்கள் பேசுவார்கள் என்பது அந்நாட்டு முன்னோர்களின் நம்பிக்கை.



அந்த நம்பிக்கையின்படி,  இந்த மம்மிக்கு சொந்த நாக்கு அகற்றப்பட்டு இம்மாதிரியான தங்க நாக்கு வைக்கப்பட்டிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

2 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை