Skip to main content

நாட்டில் கொரோனா தொற்றினால் சிசு உட்பட ஏழு பேரின் மரணங்கள் நேற்று பதிவாகின- முழு விபரம்!

Feb 03, 2021 207 views Posted By : YarlSri TV
Image

நாட்டில் கொரோனா தொற்றினால் சிசு உட்பட ஏழு பேரின் மரணங்கள் நேற்று பதிவாகின- முழு விபரம்! 

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட உயிரிழப்பின் மொத்த எண்ணிக்கை 330 ஆக அதிரகரித்துள்ளது.



18 மாத சிசு உட்பட நேற்று (செவ்வாய்க்கிழமை) ஏழு பேரின் மரணங்க்ள பதிவாகிய நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.



இதன்படி, கொழும்பைச் சேர்ந்த 18 மாத ஆண் குழந்தை கடந்த பெப்ரவரி முதலாம் திகதி லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டிருந்த போது உயிரிழந்தது. மரணத்திற்கான காரணம் கொரோனா தொற்று நிமோனியா என தெரிவிக்கப்பட்டுள்ளது.



அத்துடன், வெலிகம பகுதியைச் சேர்ந்த 67 வயது பெண்ணொருவர் கடந்த ஜனவரி 29 ஆம் திகதி இறந்தார். இவர் கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்ததுடன், இவரது இறப்புக்கான  காரணம் கொரோனா தொற்று நிமோனியா மற்றும் மூளையில் இரத்தப் போக்கு என குறிப்பிடப்படுகிறது.



மேலும், கொழும்பைச் சேர்ந்த 82 வயது பெண்ணொருவர் கடந்த 31ஆம் திகதி அவரது இல்லத்தில் உயிரிழந்தார். இவரது மரணத்திற்கான காரணம் கொரோனா தொற்று நிமோனியா, உயர் இரத்த அழுத்தம் மற்றும் ஒரு பக்கவாதம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



அத்துடன், வத்தேக பகுதியைச் சேர்ந்த 73 வயது பெண்ணொருவர் கடந்த 31ஆம் திகதி உயிரிழந்துள்ளார். இவருக்கு கண்டி பொது வைத்தியசாலையில் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், தெல்தெனிய ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.



இவரது இறப்புக்கான காரணம் கொரோனா தொற்று நிமோனியா, கடும் நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் என தெரிவிக்கப்படுகிறது.



இதனைவிட, நிட்டம்புவ பகுதியைச் சேர்ந்த 80 வயதுடைய பெண்ணொருவருக்கு கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டதுடன் பிம்புர மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.



இந்நிலையில், அவர் கடந்த முதலாம் திகதி உயிரிழந்ததுடன் அவரது இறப்புக்கான காரணம் கொரோனா தொற்று நிமோனியா, இரத்த சோகை, நீரிழிவு நோய் மற்றும் இதய நோய் எனக் குறிப்பிடப்படுகிறது.



அத்துடன், கெலிஓயாவைச் சேர்ந்த 77 வயது ஆணொருவர் கடந்த முதலாம் திகதி உயிரிழந்தார். இவர் பெரதெனியா போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்தநிலையில் தெல்தெனிய ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.



இவரது இறப்புக்கான காரணம், கொரோனா தொற்று நிமோனியா மற்றும் இரத்த விஷமானமை, கடுமையான நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக நோய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதேவேளை, ராகம பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ஆணொருவருக்கு ராகம தனியார் வைத்தியசாலையில் கெரோனா தொற்று கண்டறியப்பட்டு, பின்னர் கராப்பிட்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.



அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைபெற்று வந்த அவர், கடந்த இரண்டாம் திகதி உயிரிழந்தார். இவரது இறப்புக்கான காரணம் கடுமையான கொரோனா தொற்று நிமோனியா, உயர் இரத்த அழுத்தம் மற்றும் ஆஸ்துமா என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

1 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை