Skip to main content

நம்பிக்கையுடன் இணைந்து பணியாற்றி உங்களது எதிர்காலத்தை வெற்றிகொள்ளுங்கள் – டக்ளஸ்

Jan 31, 2021 197 views Posted By : YarlSri TV
Image

நம்பிக்கையுடன் இணைந்து பணியாற்றி உங்களது எதிர்காலத்தை வெற்றிகொள்ளுங்கள் – டக்ளஸ் 

யாழ். மாவட்ட இளைஞர் சம்மேளனத்தில் நம்பிக்கையுடன் இணைந்து பணியாற்றி உங்களது எதிர்காலத்தை வெற்றிகொள்ளுங்கள். அதன் வளர்ச்சிக்காக அமைச்சர் நாமல் ராஜபக்சவுடன் நான் உறுதுணையாக இருப்பேன் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார்.



யாழ். மாவட்ட இளைஞர் சமேளனத்திற்கான நிர்வாகக் குழு அங்குரார்ப்பண நிகழ்வு இன்றையதினம் நடைபெற்றது.



குறித்த நிகழ்வில் பிரதமவிருந்தினராக கடற்றொழில் அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா கலந்து சிறப்பித்து சம்மேளனத்தை அங்குரார்ப்பணம் செய்தபின் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.



இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் –



இந்த நிகழ்வுக்கு என்னை பிரதமவிருந்தினராக அழைத்தது மட்டுமல்லாது இச்சம்மேளனத்திற்கு ஒரு வழிகாட்டியாக இருக்குமாறும் அழைப்பு விடுத்துள்ளார்கள். அவர்கள் இந்த அழைப்பை சரியாக இனங்கண்டே அழைத்துள்ளார்கள் என எண்ணுகின்றேன்..



நானும் இம்மண்ணில் பிறந்து வளர்ந்த ஒருவன். ஆனாலும் அன்றைய கால அரசியல் நிலைமைகள் என்னை வேறு ஒரு திசை நோக்கி அழைத்துச் சென்றுவிட்டது.



அதனால் நாம் திசைதிருப்பப்பட்டு அப்போது எமது மக்களுக்கு இருந்த பிரச்சினைக்கு ஆயுத போராட்டமே சரியானதென அன்று அதில் இறங்கியிருந்தோம்.



ஆனாலும் துரதிஸ்டவசமாக இயக்கங்களுக்கிடையே ஏற்பட்ட முரண்பாடுகள், சகோதர படுகொலைகள் காரணமாக போராட்டம் திசைமாறிவிட்டது.



இந்தநிலையில் 1987 களில் ஏற்படுத்தப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டு அதை அதிலிருந்து முன்னோக்கிச் செல்லலாம் என்று நாம் அரசியல் ஜனநாயக வழியில் இறங்கியிருந்தோம்.



இங்கு நீங்கள் உங்களது சம்மேளனத்தின் உதிமொழியாக ஒற்றுமை, நட்பு, ஒத்துழைப்பு அபிவிருத்தி ஆகிய நான்கு விடயங்களை உள்ளிடக்கியுள்ளீர்கள்.



இதில் ஒற்றுமை, நட்பு என்பதை, அதாவது நீங்கள் வாழுகின்ற சமூகத்திற்கிடையே மட்டுமல்ல தேசிய ரீதியிலும் வளர்த்தெடுக்க வேண்டும்.



எமது பிரச்சினைகளுக்கான தீர்வை காண்பதற்கு தேசிய நல்லிணக்கம் அவசியம். அது சரணாகதியோ அடிமைத்தனமோ அல்ல. பேச்சுவார்தைகளினூடாகவும் புரிந்துணர்வின் ஊடாக எமது பிரச்சினைகளை வெளிப்படுத்தி அந்த பிரச்சினைகளுக்கான தீர்வுகளை எட்டமுடியும் என்பதே உண்மையானது.



இந்த தேசிய நல்லிணக்கத்தினூடாக எமது மக்களது பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என்ற எண்ணத்துடனேயே அன்று உருவான இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டோம். துரதிஸ்டவசமாக தவறான வழிடத்தல் காரணமாக அந்த வழிமுறை தோற்றுவிட்டது. ஆனாலும் தமிழ் மக்கள் தோற்றுவிடவில்லை.



அந்தவகையில் நீங்க்ள ஒவ்வோருவரும் தைரியத்துடனும் நம்பிக்கையுடனும் இந்த இளைஞர் மன்றத்தில் இணைந்து அதனூடாக உங்களது பிரச்சினைகளுக்கு தீர்வுகளை காணமுடியும் என்ற நம்பிக்கையை நான் உங்களிடம் தெரிவிக்கின்றேன்.



அதேபோன்று இந்த சம்மேளனத்திடம்  அதிகளவான பிரச்சினைகள் உள்ளதாகவும் அதற்கு தீர்வகளை பெற்றுத்தருமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவை தொடர்பில் தீர்வுகளை பெற்றுத்தர நான் தயாராகவே இருக்கின்றேன்.



குறிப்பாக உங்களுக்கு நாமல் ராஜபக்ச என்ற ஒரு சிறந்த அமைச்சர் உள்ளார். அவர் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தெளிவாக புரிந்துகொண்டவர்.



அவரும் ஓர் இளைஞராக இருப்பதால் உங்களது பிரச்சினைகளை அறிந்துகொள்ளக் கூடியவராக இருப்பதுடன் ஓர் அறிவாந்த, தற்துணிவுள்ள அமைச்சராகவும் அவர் இருப்பதால் நிங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அனைத்துக்கும் இலகுவாக தீர்வுகளை காணமுடியும் என்பதுடன் அவர் உங்களுக்காக முன்னெடுக்கம் முயற்சிகளுக்கு நானும் துணை நிற்பேன் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை