Skip to main content

புதிய ஆணைக்குழுவை வரவேற்கிறேன்- அமைச்சர் டக்ளஸ்!

Feb 01, 2021 323 views Posted By : YarlSri TV
Image

புதிய ஆணைக்குழுவை வரவேற்கிறேன்- அமைச்சர் டக்ளஸ்! 

அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள புதிய ஆணைக்குழுவை வரவேற்ப்பதாக கடற்றொழில் நீரியல் வழங்கல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.



வன்னிபிராந்திய பிரதிப்பொலிஸ்மா அதிபர் காரியாலத்தின் சமுதாய வேலைத்திட்டத்தின் கீழ் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றிற்கு 15 இலட்சம் ரூபாய் செலவில் வீடு ஒன்று அமைக்கப்பட்டு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பாவனைக்காக கையளிக்கப்பட்டது.



குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். டக்ளஸ் தேவானந்தா  மேலும் கூறியுள்ளதாவது, “மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக புதியஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டமை நன்மையான விடயமே.



ஆட்சி மாறியுள்ளமையால் நடந்த உண்மைகளை அறிவதற்காக அவ்வாறான குழுக்களை அமைத்து, தகவல்களை பெற்றுக்கொள்வதும் உண்டு. அந்தவகையில் அது வரவேற்ககூடிய விடயமாகும்.



இதேவேளை, இந்தியாவுடனும் நாங்கள் நட்புறவை பேணவேண்டும். அந்தவகையில் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு வழங்குவதற்கு உத்தேசித்துள்ளமையும் நல்ல விடயமேயாகும். சட்டரீதியான பிரச்சினைகள் இருப்பதால் 51 வீதத்தை இலங்கை அரசும் வேறு முதலீட்டாளர்களிற்கு 49 வீதத்தையும் வழங்கினாலேயே அது அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்றவகையில் அது செய்யப்பட்டுள்ளது.



கொரோனா தடுப்பூசிக்காகவே அதனை வழங்குவதாக கூறுகின்றமை எதிர்கட்சி அரசியல்வாதிகள் வழமையாக கதைக்கும் விடயமே” என அவர் குறிப்பிட்டுள்ளார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை