Skip to main content

மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 70ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்!

Dec 12, 2020 255 views Posted By : YarlSri TV
Image

மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 70ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்! 

நூற்றுக் கணக்கான திரைப்படங்களின் மூலம் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 70ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ஜனவரி மாதம் அவர் கட்சி தொடங்கவிருப்பது அவரது ரசிகர்களை பெரும் மகிழ்ச்சி அடையச் செய்திருக்கிறது.



இன்று அவரது பிறந்தநாளையொட்டி, சென்னை போயஸ் கார்டன் இல்லத்தின் வாயிலில் கூடிய ரசிகர்கள் கேக் வெட்டியும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் நடிகர் ரஜினிகாந்துக்கு முதல்வர் ஈபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ், மு.க ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் சினிமா பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.



நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்று என்னை வாழ்த்திய மதிப்பிற்குரிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கும், துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் முக. ஸ்டாலினுக்கும் மத்திய மாநில அரசியல் நண்பர்களுக்கும், என் நலம் விரும்பிகளுக்கும் சக திரைக்கலைஞர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும் மற்றும் உற்சாகத்துடன் என் பிறந்தநாளைக் கொண்டாடிவரும் உலகெங்கிலும் உள்ள என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை