Skip to main content

9 மாத சிகிச்சைக்கு பின்னர் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பெண் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்!

Dec 10, 2020 220 views Posted By : YarlSri TV
Image

9 மாத சிகிச்சைக்கு பின்னர் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பெண் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்! 

கொரோனா வைரசால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். 15 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை அதிகரிக்கும்போதும் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது.



இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா பாதிக்கப்பட்ட பெண்மணி 9 மாதகால தீவிர சிகிச்சைக்கு பின் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.



அமெரிக்காவின் தெற்கு புளோரிடா மாகாணத்தின் மையாமி நகரில் உள்ள ஜாக்சன் மெமோரியல் மருத்துவமனையில் உதவியாளராக பணியாற்றிவந்தவர் ரோசா பிலிப் (41). மருத்துவமனையில் பணியாற்றிவந்த ரோசாவுக்கு கடந்த மார்ச் 9-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.



இதையடுத்து, அவர் தான் பணிபுரிந்துவந்த அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஏற்கனவே நீரிழிவு நோய் மற்றும் ஆஸ்துமா ஆகிய பிரச்சனைகள் இருந்துள்ளன. இதனால், கொரோனா சிகிச்சை அளிப்பதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது. அவரின் உடல்நிலை மிகவும் மோசமான நிலைக்கு சென்றுள்ளது.



இதை தொடர்ந்து அவரது உடலில் ரத்த அடைப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், கொரோனாவின் தீவிரத்தால் அவருக்கு நுரையீரல் செயலிழந்ததையடுத்து டையாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டது.



இத்தனை சிகிச்சை முறை மற்றும் கொரோனாவால் ரோசாவின் கை விரல்கள் கருமை நிறத்திற்கு மாறிவிட்டது. மேலும், அவரின் கால்களின் செயல்பாடுகள் பெருமளவு முடங்கியது. அவர் தனது படுக்கையில் இருந்து எழ முயற்சி செய்யும்போதெல்லாம் அவரது ரத்த அழுத்தத்தின் அளவு குறைந்துள்ளது. 


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை