Skip to main content

கொவிட்-19: அமெரிக்காவில் இரண்டாவது தடவையாக இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

Dec 03, 2020 262 views Posted By : YarlSri TV
Image

கொவிட்-19: அமெரிக்காவில் இரண்டாவது தடவையாக இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு! 

அமெரிக்காவில் அசுர வேகத்தில் பரவிவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், இரண்டாவது தடவையாக இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.



கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால் இரண்டு இலட்சத்து 3ஆயிரத்து 427பேர் பாதிக்கப்பட்டதோடு, இரண்டாயிரத்து 831பேர் உயிரிழந்துள்ளனர்.



முன்னதாக கடந்த 20ஆம் திகதி அமெரிக்காவில் இரண்டு இலட்சத்து நான்காயிரத்து 166பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதுவே அமெரிக்காவில் பதிவான நாளொன்றுக்கான அதிகப்பட்ச எண்ணிக்கையாகும்.



உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பு மற்றும் உயிரிழப்பை சந்தித் முதல் நாடாக விளங்கும் அமெரிக்காவில், இதுவரை ஒரு கோடியே 43இலட்சத்து 13ஆயிரத்து 941பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இரண்டு இலட்சத்து 79ஆயிரத்து 865பேர் உயிரிழந்துள்ளனர்.



தற்போதுவரை வைரஸ் தொற்றினால் 55இலட்சத்து 71ஆயிரத்து 729பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 26ஆயிரத்து 187பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.



அத்துடன் இதுவரை 84இலட்சத்து 62ஆயிரத்து 347பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை