Skip to main content

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நேறஂறு  பிற்பகல் முதல் கொட்டித் தீர்க்கும் கடும் மழையினால் பல கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.!

Dec 07, 2020 328 views Posted By : YarlSri TV
Image

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நேறஂறு  பிற்பகல் முதல் கொட்டித் தீர்க்கும் கடும் மழையினால் பல கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.! 

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நேறஂறு  பிற்பகல் முதல் கொட்டித் தீர்க்கும் கடும் மழையினால் பல கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.



யாழ்ப்பாணம், வலிகாமம் தென்மராட்சியில் இன்று பிற்பகல் 2.30 மணி தொடக்கம் இரவு 8 மணிவரையில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.



யாழ்ப்பாணத்தில் பல பகுதிகளில் நேறஂறு  பிற்பகல் முதல் மழை கொட்டியது. குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் அதிகளவு மழைவீழ்ச்சி பதிவானதால், மாவட்டத்தின் தாழ்வான பகுதிகள் திடீரென வெள்ளத்தில் மூழ்கின.



2008ஆம் ஆண்டு ஆண்டு நிஷா புயலால் ஏற்பட்ட வெள்ள நிலமை போன்று யாழ்ப்பாணத்தில் தற்போது ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.



கடந்த வாரம் புரேவி புயலால் இடம்பெறர்ந்து நலன்புரி முகாங்களில் தங்கியிருந்த மக்கள் வீடு திரும்பிய நிலையில் மீளவும் நலன்புரி நிலையங்களுக்குத் திரும்புவதாகம் அதிகாரிகள் கூறினர்.



பல வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது. ஓடுவதற்கு இடமில்லாமல் பல வீதிகளில் வெள்ளம் தேங்கி நிற்கின்றது.



யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நாளை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. எனினும் மழை தொடருமாக இருந்தால் அடுத்துவரும் தினங்களில் பாடசாலைகளை நடத்துவது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை